இந்தியாவில் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் வகையின் அறிமுக தேதியில் மாற்றம்?

|

இந்தியாவில் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் வகையின் அறிமுகம், இந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் நாங்கள் தெரிவித்து இருந்தோம். ஆனால் அதற்கு முன்னதாகவே, தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்படலாம் என்று டெக்கூக் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் வகையின் அறிமுக தேதியில் மாற்றம்?

இந்தச் செய்தியில், இந்தியாவில் இந்த மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய விடுமுறை என்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே, அதாவது ஜனவரி 23 ஆம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் வகையின் அறிமுகம் நிகழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரு தேதிகளையும் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் கிடைக்காத பட்சத்தில், இந்தியாவில் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் வகையின் அறிமுக தேதியை ஒன்பிளஸ் தரப்பில் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

ஒன்பிளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் திறப்பு மற்றும் முதல் பார்வைகள்

இந்த ஒன்பிளஸ் 5டி லாவா சிவப்பு நிற வகை துவக்கத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்திற்கு அது சொந்த சந்தை என்பதால், இப்போது வரை தொடர்ந்து தனித்தன்மையோடு திகழ்கிறது.

இந்த வகையின் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஸ்டார் வார்ஸ் லிமிடேட் பதிப்பு மாடல் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, ஒன்பிளல் 5டி சாண்டுஸ்டோன் வைட் வகையை ஒரு லிமிடேட் பதிப்பு மாடலாக இந்நிறுனம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 9 ஆம் தேதி முதல் இதன் விற்பனை சீனாவில் தொடங்கும்.

வெளிபுற அழகியல் மாற்றங்கள் மட்டுமின்றி, மேற்கூறிய எல்லா வகைகளும் இதன் உண்மையான ஒன்பிளஸ் 5டி மிட்நைட் பிளாக் வகையின் சிறப்பம்சங்களில் இருந்து வேறுபடுகின்றன. மேலும், இந்த எல்லா வகைகளும் 8ஜிபி ராம் மற்றும் 128ஜிபி கொள்ளளவு அம்சங்களுடன் கூடிய ஒன்பிளஸ் 5டி உயர்நிலை மாடலாக மட்டுமே கிடைக்கப் பெறுகின்றன. இந்த ஃபோனின் வெண்ணிலா வகையில் 6ஜிபி/8ஜிபி ராம் மற்றும் 64ஜிபி/128ஜிபி கொள்ளளவு திறன் காணப்படுகிறது.

இதன் சிறப்பம்சங்களைக் குறித்து பார்த்தால், ஒன்பிளஸ் 5டி ஒரு 6-இன்ச் அமோலிட் எப்ஹெச்டி+ திரையைப் பெற்று, 2160 x 1080 பிக்சல்கள் பகுப்பாய்வு மற்றும் 18.9 விகிதத்தில் அமைந்துள்ளது.

6ஜிபி ரேம் & 5.2 டிஸ்பிளேவுடன் வெளிவரும் மெய்ஸூ ப்ரோ 7.!6ஜிபி ரேம் & 5.2 டிஸ்பிளேவுடன் வெளிவரும் மெய்ஸூ ப்ரோ 7.!

இது, ஒரு அக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி உடன் விரைவில் சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்நிறுவனத்தின் டேஸ் சார்ஜ் கொண்ட ஒரு 3300எம்ஏஹெச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

முன்பக்க கேமராவை பொறுத்த வரை, ஒன்பிளஸ் 5டி ஒரு இரட்டை கேமரா அமைப்பையும், பின்பக்கத்தில் ஒரு எப்/1.7 துளையுடன் கூடிய ஒரு 16எம்பி பிரைமரி சென்ஸர் மற்றும் 20எம்பி செக்கண்டரி சென்ஸர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் செல்பீ கேமரா எப்/2.0 துளையைக் கொண்ட ஒரு 16எம்பி கேமரா ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட் உடன் அறிமுகம் செய்யப்பட்டாலும், பின்னர் ஆண்ட்ராய்டு ஓரியோ ஓபன் பீட்டா புதுப்பிப்புகளைப் பெற்றது. இவை அனைத்தும் இதன் கவனிக்கத்தக்க மேம்பாடுகளும், புதிய அம்சங்களும் ஆகும்.

இந்தியாவில் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் வகையின் அறிமுக தேதி இன்னும் உறுதியாகத் தெரியாதபட்சத்தில், இதன் விலை மிட்நைட் பிளாக் வகையை ஒத்தாற்போல ரூ.37,999 என்று நிர்ணயிக்கப்படலாம் என்பதோடு, அமேசானில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 5T Lava Red color variant was speculated to be launched in India on January 26. Now, it looks like this variant could be launched in India on January 23. The device is said to be available only in the high-end variant with 8GB RAM and 128GB storage and carry the same price tag of Rs. 37,999.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X