Home
News

காதலர் தினத்தை முன்னிட்டு விலைகுறைப்புடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி லாவா ரெட்.!

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் விலைகுறைப்பு, சிவப்பு நிற எடிஷன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, காதலர் தினத்தை முன்னிட்டு ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கண்கவரும் வண்ணத்தில் வெளிவருவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அமேசான் வலைதளத்தில் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் இஎம்ஐ ஆஃபர் மற்றும் கேஷ்பேக் போன்றவை வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் வழங்கும் இந்த சிறப்பு ஆஃபர்கள் பிப்ரவரி 7-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 விலை:

விலை:

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரிக் கொண்ட இந்த ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.37,999-ஆக உள்ளது.

 ஒன்பிளஸ் 5டி :

ஒன்பிளஸ் 5டி :

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஒன்பிளஸ் 5டி லாவா ரெட் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

20எம்பி டூயல் ரியர் கேமரா:

20எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 3450எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 5T Lava Red is back in stocks with Valentines Day exclusive offers; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X