மாணவர்களுக்கு ஒன்பிளஸ் 5 அளிக்கும் புதிய 10% சலுகை

By Siva
|

உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்காக ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஒருசில புரோகிராம்களை 10% சலுகை விலையில் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு ஒன்பிளஸ் 5 அளிக்கும் புதிய 10% சலுகை

சீன நிறுவனங்களில் ஒன்றான ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது ஸ்மார்ட்போன், இதர பொருட்கள் அலல்து இரண்டையும் அதன் அதிகாரபூர்வ இணையதளங்களில் இருந்து ஆர்டர் செய்யும் மாணவர்களுக்கு 10% புதிய சலுகையை அறிவித்துள்ளது.

இந்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ பிளாக் போஸ்ட்டில் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் உற்சாகியுள்ளனர். மாணவர்களின் நலனுக்காக மூன்று புதிய அசைன்மெட்டுக்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகவும், இந்த அசைன்மெண்ட்டுகளை மாணவர்கள் தவறாது சலுகை விலையில் ஒன்பிளஸ் போனுடன் வாங்கி பயன்படுத்தி கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அசைன்மெண்ட்டுகள் குறித்து தற்போது பார்ப்போமா?

அசைன்மெண்ட் 1: நீங்கள் மாணவர் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் டாக்குமெண்ட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் மாணவர்களுக்கு என்று தனியாக இருக்கும் லாகினுக்கு சென்று மாணவர்களுக்கான சலுகையை பெற தகுதியாகி விடுகிறீர்கள்

அசைன்மெண்ட் 2:
நீங்கள் இப்போது இந்த மாணவர் புரோகிராமில் ஒரு உறுப்பினராகி விட்டீர்கள். அதனால் தற்போது நீங்கள் உங்களுடைய 10% சலுகையை பெற தகுதி உடையவராகிவிட்டீர்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கூப்பனை ஒரே ஒரு பட்டனை தட்டி பெற வேண்டியதுதான்

அசைன்மெண்ட் 3: கூப்பனை பெற்றுவீட்டீர்கள் என்றால் நீங்கள் ஆர்டர் செய்யும் எந்த பொருளுக்கும் 10% சலுகையை பெற்று கொள்ளலாம். அதே நேரத்தில் கூப்பனை பெற்றவுடன் ஒரு மாதத்தில் அதை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய புரோகிராம் மூலம் மாணவர்கள் ஒன்பிள 5 மாடலை ரூ.3000 வரை சலுகை பெற்று கொள்ளலாம். இந்த போனில் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 8GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உள்ள ஒன்பிளஸ் 5 மாடலுக்கு ரூ.3400 வரை சலுகை பெற்று கொள்ளலாம்.

வீட்டில் பயன்படுத்தும் இண்டர்நெட் நெட்வொர்க்கை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்வீட்டில் பயன்படுத்தும் இண்டர்நெட் நெட்வொர்க்கை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்

மேலும் ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே சலுகை அளிக்கப்படும். ஆனால் அதே நேரத்தில் ஸ்மார்ட்போனை தவிர வேறு பொருட்கள் வாங்கினால் அதற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்

மேலும் இந்த சலுகை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரியா, பெல்ஜியம், குரோஷியா, செக்கோஸ்லோவாக்கியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, இத்தாலி, நெதர்லந்து, போலந்து, போர்ச்சுக்கல், ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus has introduced a new Student Program, participating in which students from across the world can get up to 10 per cent off on OnePlus 5 purchase.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X