அமேசான் இந்தியா தளத்தின் விற்பனையில் சாதனை படைத்த ஒன்பிளஸ் 5.!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கிறது. வெற்றிபெற நினைக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் சீன சந்தையைத் தொடர்ந்து இந்திய சந்தை மிகப்பெரியதாக உள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறுவனமாக ஒன்பிளஸ் இருக்கிறது. இந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான் ஒன்பிளஸ் 5 இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அமேசான் இந்தியா தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் ஒன்பிளஸ் 5 விற்பனையில் சாதனை படைத்துள்ளது. ஒன்பிளஸ் ட்விட்டரில் அந்நிறுவனம் கடந்த வார விற்பனையில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 5 என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்பிளஸ் தனது இந்திய வாடிக்கையாளர்களை நன்கு புரிந்து வைத்துள்ளது. அந்நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை 6 ஜிபி ரேம் / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் / 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.32,999 மற்றும் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனையில் சாதனை படைக்கும் முன் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கால் பெய் டுவிட்டர் மூலம் தெரிவித்த தகவலில் ஒன்பிளஸ் 5 சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாவதாக சதெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications