என்னப்பா சொல்றீங்க? நிஜமாவா! OnePlus 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் தளத்தில் Big Saving Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது இன்று இரவு முடிவடைகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் எனப் பல்வேறு சாதனங்களுக்கு இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பத குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் OnePlus Y1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.17,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.

இப்போது இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 240 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.
இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலில் Cortex-A53 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவும் உள்ளது. பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக சியோமி நிறுவனத்தை விட ஒன்பிளஸ் நிறுவனம் ஆடியோ வசதியில் அதி கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். பட்ஜெட் விலையில் ஒரு அருமையான 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால் இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலை வாங்குவது நல்லது.


Click it and Unblock the Notifications