இடைநீக்கம் செய்யுமளவு அப்படி என்ன இருக்கு இந்தப் போனில்??

Written By:

உண்மைய தான் சொல்றாங்களா, இதெல்லாம் நம்பும் படியா இல்லையே பா எனச் சொல்ல வைக்கின்றது ஒன் பிளஸ் புதிய சங்கதி. ஸ்மார்ட்போன் உலகில் குறைந்த மாடல்களை மட்டும் வெளியிட்ட ஒன் பிளஸ் இப்படி சொல்றத நம்பலாமா, வேண்டாமா என்ற சிக்கலில் சந்தை வல்லுநர்கள் சிக்கியுள்ளனர்.

யார் எங்க சிக்கியிருந்தா நமக்கு என்ன? நீங்க என்னடா சொல்ல வறீங்கனு? - மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு நல்லாவே கேக்குது, வழக்கம் போல ஒன் பிளஸ் சங்கதி என்னான்னு ஸ்லைடர்லையே பாருங்க..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அறிவிப்பு

அறிவிப்பு

ஒன் பிளஸ் நிறுவனம் தனது ஒன் பிளஸ் 3 கருவியின் விற்பனையை சில நாட்களுக்கு இடை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இன்வைட்

இன்வைட்

ஒன் பிளஸ் நிறுவனம் அழைப்பிதழ் எனப்படும் இன்வைட் முறையில் கருவிகளை விற்பனை செய்து வந்தது. இந்த முறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும், ஒன் பிளஸ் தன் கருவிகளின் ஒட்டு மொத்த விநியோகம் மற்றும் தட்டுப்பாடுகளின் மீது நேரடி கணக்கு வைத்திருந்தது.

முதல் முறை

முதல் முறை

ஒன் பிளஸ் 3 கருவியினை அந்நிறுவனம் முதல் முறையாக இன்வைட் இல்லாமல் விற்பனை செய்தது. இதன் காரணமாகவே அந்நிறுவனம் கருவியின் தட்டுப்பாடு பிரச்சனையை சந்திக்கின்றது.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

ஒன் பிளஸ் 3 கருவிக்கான தட்டுப்பாடுவெளியான நாள் முதல் அதிகரித்து வருவதால் ஒன் பிளஸ் நிறுவனம் கருவியின் விற்பனையை ஐரோப்பாவில் இடை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

தடை

தடை

இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்த கருவிகளின் விற்பனை ஆகஸ்டு 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

கருவிகள் மீண்டும் தயாரிக்கப்பட்டவுடன் அவற்றின் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா

இந்தியா

ஒன் பிளஸ் 3 விற்பனை ஐரோப்பாவின் சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இந்தக் கருவிகளுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
OnePlus 3 Sales Being Suspended In These Countries Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot