விலை குறைந்த OnePlus 18W போன் கூலர்.. இனி எல்லா போனுக்கும் சப்போர்ட்.. எந்த போனில் யூஸ் செய்யலாம்..
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஒன்பிளஸ் 18W ஃபிரீசிங் பாயிண்ட் போன் கூலர் (OnePlus 18W Phone Cooler) டிவைஸை அறிமுகம் செய்தது. இந்த கூலர் டிவைஸ் எந்த ஸ்மார்ட்போனிற்கெல்லாம் சேரும் என்ற விபரத்தை ஒன்பிளஸ் இப்போது வெளியிட்டுள்ளது.
நீங்கள் ஒரு கேமர் என்றாலோ அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் கேம்ஸ் விளையாடுகிறீர்கள் என்றாலோ அல்லது உங்கள் போன் அடிக்கடி கேம் விளையாடும் போது அதிக சூடாகிறது என்றாலோ, நீங்கள் கட்டாயமாக இந்த ஒன்பிளஸ் 18W ஃபிரீசிங் பாயிண்ட் போன் கூலர் (OnePlus 18W Freezing Point Phone Cooler) சாதனத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

ஒன்பிளஸ் 18W ஃபிரீசிங் பாயிண்ட் போன் கூலர் (OnePlus 18W Freezing Point Phone Cooler) விலை என்ன?
இந்த டிவைஸ் ஒன்பிளஸ் போன்கள் மட்டுமின்றி மற்ற பிராண்டட் சாதனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இப்போது இந்த சாதனம் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.3,999 ஆகும். ஆனால், தற்போது கிடைக்கும் சலுகையுடன் ரூ.3,299 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இயைத்து ஒன்பிளஸ் இன் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இப்போது வாங்க கிடைக்கிறது.
சரி, இப்போது இந்த ஒன்பிளஸ் 18W போன் கூலர் டிவைஸ் எந்தெந்த சாதனங்களுக்கு எல்லாம் செட் ஆகும் என்பதை பற்றி பார்க்கலாமா? OnePlus சமீபத்தில் அதன் OnePlus 18W ஃபோன் கூலருக்கான பொருந்தக்கூடிய விவரங்களைப் புதுப்பித்துள்ளது. இந்தச் சாதனத்தில் எந்த பவர் அடாப்டர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை நிறுவனம் இப்போது தெளிவுபடுத்தியுள்ளது.
கேமிங் போன்ற தீவிரமான பணிகளின் போது உங்கள் மொபைலின் வெப்பநிலையைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட இந்த கூலிங் டிவைஸ், பல்வேறு OnePlus பவர் அடாப்டர்கள் மற்றும் பிற பிராண்டுகளின் அடாப்டர்கள் சிலவற்றிலும் பயன்படுத்தப்படலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. சரி, எந்த அடாப்டர்கள் இந்த கூலிங் டிவைஸிற்கு பொருத்தமானது என்று பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 18W ஃபோன் கூலருடன் இணங்கக்கூடிய அடாப்டர்களின் பட்டியல் இதோ:
1. ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 30W பவர் அடாப்டர் (OnePlus Warp Charge 30W Power Adapter):
குறைந்தபட்ச செயல்திறனுடன் 10W வெளியீட்டை ஆதரிக்கிறது.
2. ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 65W பவர் அடாப்டர் டைப்-A (OnePlus Warp Charge 65W Power Adapter Type-A):
குறைந்தபட்ச செயல்திறனுடன் 10W வெளியீட்டை ஆதரிக்கிறது.
3. ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 65W பவர் அடாப்டர் டைப்-சி (OnePlus Warp Charge 65W Power Adapter Type-C):
இந்த வகையானது அதிகபட்ச செயல்திறனுடன் உகந்த குளிரூட்டலுக்கு முழுமையாக துணைபுரிகிறது.
4. சூப்பர்வூக் 80W பவர் அடாப்டர் (SUPERVOOC 80W Power Adapter):
குறைந்தபட்ச செயல்திறனுடன் 10W வெளியீட்டை ஆதரிக்கிறது.
5. சூப்பர்வூக் 100W பவர் அடாப்டர் (SUPERVOOC 100W Power Adapter):
இது அதிகபட்ச செயல்திறனுடன் ஃபோன் குளிரூட்டியை ஆதரிக்கிறது.
6. சூப்பர்வூக் 100W பவர் அடாப்டர் (SUPERVOOC 160W Power Adapter) :
சிறந்த குளிரூட்டலுக்கான அதிகபட்ச செயல்திறனுடன், ஃபோன் கூலரை ஆதரிக்கிறது.
OnePlus 18W ஃபோன் கூலரில் 18W மற்றும் 10W என இரண்டு உள்ளீடுகள் உள்ளன. அவற்றைப் பார்க்க, உங்கள் ஃபோன் கூலர் ரெட் மற்றும் ப்ளூ நிற அறிகுறிகளைக் காண்பிக்கும். 18W உள்ளீடு உகந்த செயல்திறனுக்காக ரெட் மற்றும் துணை உகந்த செயல்திறனுக்காக 10W திறனை ப்ளூ நிறத்தில் பிரித்து காண்பிக்கிறது. கேமிங்கின் போது சிறந்த குளிரூட்டலுக்கு சரியான அடாப்டரைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. உங்களிடம் ஏதேனும் QC 3.0 அடாப்டர் இருந்தால், அதை ஃபோன் கூலரில் முயற்சி செய்யலாம்.


Click it and Unblock the Notifications