Home
News

இன்னொரு சர்ப்ரைஸ்.. 7000mAh பேட்டரி உடன் புதிய OnePlus போன்.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

4-ஆம் நம்பர் மீது இருக்கும் "பயத்தின்" விளைவாக ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கு பின் ஒன்பிளஸ் 14 (OnePlus 14) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யாமல், நேரடியாக ஒன்பிளஸ் 15 (OnePlus 15) மாடலை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியான வேகத்தில் இன்னொரு "சர்ப்ரைஸ்" ஆன தகவல் வெளியாகியுள்ளது.

அதென்ன தகவல்? ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனின் "அப்கிரேடட் வெர்ஷன்" ஆனது வரவிருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை விட பெரிய பேட்டரியை கொண்டிருக்கலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நம்பகமான சீன டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன், நோட்புக் செக் உடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

இன்னொரு சர்ப்ரைஸ்.. 7000mAh பேட்டரி உடன் புதிய OnePlus போன்!

இங்கே நாம் பேசும் ஒன்பிளஸ் 13எஸ்-ன் அப்கிரேடட் வெர்ஷன் என்றால் என்ன மாடல்? ஒன்பிளஸ் 14 மாடலை போலவே ஒன்பிளஸ் 14டி (OnePlus 14T) மற்றும் ஒன்பிளஸ் 14எஸ் (OnePlus 14s) ஆகிய மாடல்களும் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம். ஆக சீனாவில் ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஆக அறிமுகமாகும் மாடல், உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக வரும். இதுவே ஒன்பிளஸ் 13எஸ் மாடலின் அப்கிரேடட் எடிஷன் ஆக இருக்கும்.

ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன் அடுத்த 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகம் செய்யப்படலாம். பெரும்பாலும் பிளாக்ஷிப் மாடல்கள் தான் ஹை-எண்ட் அம்சங்களை கொண்டிருக்கும். ஆனால் இந்த லேட்டஸ்ட் லீக் ஆனது ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஸ்மால் பிளாக்ஷிப் மாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடும் என்று பரிந்துரைக்கிறது.

சரி ஒன்பிளஸ் 15-ஐ விட பெரிய பேட்டரி என்றால்.. எவ்வளவு பெரியது? டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனெரஷன் காம்பாக்ட் ஸ்மார்ட்போனானது சில தீவிரமான மேம்படுத்தல்களை பெறும். இதை புரிந்துகொள்ள குறிப்பிட்ட டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் லீக்டு அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.3-இன்ச் பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது பிளாக்ஷிப் பெர்பார்மென்ஸ் உடன் "ஒட்டிக்கொண்டால்" பெரும்பாலும் (வரவிருக்கும்) ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் (Snapdragon 8 Elite 2 SoC) கொண்டுதான் இயங்கும்.

இன்னொரு சர்ப்ரைஸ்.. 7000mAh பேட்டரி உடன் புதிய OnePlus போன்!

மேலும் இது மெட்டாலிக் மிடில் பிரேம் மற்றும் 3டி அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் - ஒன்பிளஸ் 13டி / ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் உள்ள ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் ஒப்பிடும் போது இது பெரிய மேம்படுத்தல் ஆக இருக்கும். ஆனால் பேட்டரி டிபார்ட்மென்ட்டில் இருக்கும் அப்கிரேட் தான் ஹைலைட் ஆக இருக்கும்

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் சரியான பேட்டரி கெப்பாசிட்டி பற்றி தெரியவில்லை என்றாலும், ஒன்பிளஸ் 15டிஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப் ஆனது ஒன்பிளஸ் 15 மாடல விட அதிகமாக இருக்கும் என்று டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் நம்புகிறார். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13டி ஏற்கனவே 6,000mAh+ பேட்டரியை கொண்டிருப்பதால், ஒன்பிளஸ் 15டி ஆனது 7000mAh பேட்டரியை மீறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏன் ஒன்பிளஸ் 14, ஒன்பிளஸ் 14டி / ஒன்பிளஸ் 14எஸ் க்கு பதிலாக ஏன் ஒன்பிளஸ் 15, ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் அறிமுகம் செய்யப்படுகிறது? சில ஆசிய சந்தைகளில் நிலவும் டெட்ராஃபோபியா (Tetraphobia) காரணமாக "4" என்கிற எண்ணை தவிர்த்து, ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 13 மாடலுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் 14,14டி / 14எஸ் மாடல்களை அறிமுகம் செய்யாமல், நேரடியாக ஒன்பிளஸ் 15, 15டி / 15எஸ் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெட்ராஃபோபியா என்றால் நான்காம் எண்ணின் மீதான பயம் அல்லது வெறுப்பு ஆகும். இது முதன்மையாக கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், குறிப்பாக சீனா, ஜப்பான், கொரியா மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இந்நாடுகளில் உள்ள மொழிகளில் நான்காம் எண்ணுக்கான சொல் ஆனது மரணம் (Death) என்கிற வார்த்தையுடன் மிகவும் ஒத்திருப்பதால் இந்த பயம் உருவாகியுள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T AKA OnePlus 15s Could Pack Big Battery Than OnePlus 15 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X