இதைத்தான் எதிர்பார்த்தோம்.. OnePlus-ன் அடுத்த மினி போன்.. 6500mAh பேட்டரி, SD 8 Elite 2 சிப், அல்ட்ரா வைட்!
முதலில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) என்கிற மாடல் பெயரில் உள்ள குழப்பத்தை தீர்த்துவிடுவோம். ஒன்பிளஸ் 13எஸ் மாடலுக்கு பின்னர் ஒன்பிளஸ் 14எஸ் தானே அறிமுகம் செய்யப்பட வேண்டும்? என்று உங்களில் சிலர் கேட்கலாம். ஒன்பிளஸ் 14எஸ் மாடலுக்கு என்ன ஆச்சு? என்றும் கூட உங்களில் சிலர் கேட்கலாம். அதற்கு காரணம் - டெட்ராஃபோபியா!
டெட்ராஃபோபியா என்றால் நான்காம் எண்ணின் மீதான பயம் அல்லது வெறுப்பு ஆகும். இது முதன்மையாக கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், குறிப்பாக சீனா, ஜப்பான், கொரியா மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இந்நாடுகளில் உள்ள மொழிகளில் நான்காம் எண்ணுக்கான சொல் ஆனது மரணம் (Death) என்கிற வார்த்தையுடன் மிகவும் ஒத்திருப்பதால் இந்த பயம் உருவாகியுள்ளது.

இதன் விளைவாக "4" என்கிற எண்ணை தவிர்த்து, ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 13எஸ் மாடலுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் 14எஸ் மாடலை அறிமுகம் செய்யாமல், நேரடியாக ஒன்பிளஸ் 15எஸ் மாடலை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நடைமுறை தான் ஒன்பிளஸ் 14 மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி ஒன்பிளஸ் 15எஸ் க்கு வருவோம்!
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை உலகளவில் வெளியிட்டு ஒரு மாதமே ஆகிறது. ஆனால் அதற்குள் அடுத்த ஒன்பிளஸ் 15எஸ் பற்றிய லீக்ஸ் ஏற்கனவே வெளிவர தொடங்கியுள்ளன. அப்படியாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வழியாக ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி, சிப்செட் மற்றும் கேமரா குறித்த விவரங்கள் லீக் ஆகி உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை.. ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதன் முன்னோடிகளை விட பெரிய பேட்டரியுடன் அனுப்பப்படலாம். ஒன்பிளஸ் 13 மாடல் ஏற்கனவே ஒரு சிறிய பாடியில் 5,850mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி மாடலில் இன்னும் பெரிய 6,260mAh யூனிட் உள்ளது. ஆக ஒன்பிளஸ் 15எஸ் மாடலில் 6,500mAh பேட்டரி இடம்பெறலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை.. ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் புதிய சிப் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒன்பிளஸ்-ன் வரலாற்று ரீதியாக குவால்காமின் சமீபத்திய சிலிக்கானை அதன் அப்டேடட் மாடல்களில் பயன்படுத்தியுள்ளது. எனவே ஒன்பிளஸ் 15எஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 ஆல் இயக்கப்படலாம்.

கேமராவை பொறுத்தவரை.. ஒன்பிளஸ் 15எஸ் மாடலில் மூன்றாவது ரியர் கேமரா சேர்க்கப்படலாம். கேமரா டிபார்ட்மென்ட்டில், குறிப்பாக அதன் ப்ரோ அல்லாத மாடல்களில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் போட்டியாளர்களை விட மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே ஒன்பிளஸ் 15எஸ் மாடலில் அவற்றின் முன்னோடிகளில் இல்லாத அல்ட்ராவைடு கேமரா பேக் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- விலை 12GB + 256GB ஆப்ஷன் ரூ.54,999
- விலை 12GB + 512GB ஆப்ஷன் ரூ.59,999


Click it and Unblock the Notifications








