OnePlus 15-ன் புது லான்ச் டேட்.. நவ.13 இல்ல.. அதுக்கு முன்னாடியே இந்தியாவுக்கு வருது.. விலையும் சிக்கிருச்சு!
ஒருவழியாக - எக்கச்சக்கமான ஓவர்-ஹைப்களை உருவாக்கி உள்ள - ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போன் ஆனது எப்போது உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தேதி லீக் ஆகிவிட்டது. நேற்று வரையிலாக இது - அக்டோபர் 27 அன்று சீனாவிலும், பின்னர் நவம்பர் மாத வாக்கில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்கிற அப்டேட் மட்டுமே இருந்தது.
இப்போது ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் க்ளோபல் லான்ச் டேட் (OnePlus Global Launch Date) ஆனது நம்பகமான சோர்ஸில் இருந்து லீக் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் தளம் வழியாக டெக் பிளாக்கர் பராஸ் குக்லானி, ஸ்வீடன் நாட்டிற்கான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட்டின் ஸ்கிரீன்ஷாட்டை லீக் செய்துள்ளார்.

அதன்படி ஸ்வீடனில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது 2025 நவம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். ஆக இந்த தேதியை நாம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுக தேதியாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது நவம்பர் 12 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படலாம்.
இதற்கு முன்பாக வெளியான ஒரு லீக், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவித்து இருந்தது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 12 ஆகிய 2 தேதிகளுக்கும் பெரிய இடைவெளி இல்லை என்பதால்.. எப்படி பார்த்தாலும் நவம்பர் மாத நடுப்பகுதிக்குள் ஒன்பிளஸ் 15-ன் இந்திய அறிமுகம் நடக்கும் என்பது போல் தெரிகிறது.
தற்போது வரை ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் "விரைவில்" என்று மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அறிமுகமான பின்னர் ஒன்பிளஸ் 15 ஆனது அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 15 என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போனின் 16GB + 512GB ஆப்ஷன் ஆனது ஒன்பிளஸ் 13 மாடலின் விலையை விடக் குறைவாக இருக்கலாம்.
ஒன்பிளஸ் 15 வருகையால் விலை குறைக்கப்பட்டுள்ள ஒன்பிளஸ் 13 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்: ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக உள்ளதால், இ-காமர்ஸ் வலைத்தளங்களில் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் மாடல்களின் மீதான விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட்களையும் பார்க்க முடிகிறது.
தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் அறிமுக விலையான ரூ.69,999 க்கு பதிலாக குறைப்பை பெற்று ரூ.61,910 க்கு பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது (எழுதும் நேரத்தில் அவுட் ஆப் ஸ்டாக் ; விரைவில் ஸ்டாக் வரலாம்). குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் இதே வேரியண்ட்டை இன்னமும் ரூ.69,999 க்கு தான் விற்பனை செய்கிறது.
இதேபோல ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மீதும் நேரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் தற்போது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதன் அசல் அறிமுக விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.38,098 க்கு வாங்க கிடைக்கிறது.
அறியாதோர்களுக்கு ஒன்பிளஸ் 15 உடன் சேர்ந்து ஒன்பிளஸ் 15ஆர் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இ ருக்கும். அதவாது ஒரே அம்சங்களுடன் வெவ்வேறு மாடல் பெயர்களின் கீழ் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








