அம்புட்டு பேரும் எதிர்பார்த்த அப்டேட்.. OnePlus 13T எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? ஆனால் ஒரு டிவிஸ்ட்!
ஒருவழியாக.. கடந்த பல மாதங்களாக "ஒன்பிளஸ் 13 மினி" (OnePlus 13 Mini), "ஒன்பிளஸ் காம்பாக்ட் போன்" (OnePlus Compact Phone), ஒன்பிளஸ் மினி ஸ்மார்ட்போன்" (OnePlus Mini Smartphone) என்கிற தலைப்பின் கீழ் பல வகையான லீக்ஸ்களில் சிக்கிய ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் டி-சீரீஸின் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது
இது நிச்சயம் இந்தியாவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனத்தின் டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (OnePlus T-Series Smartphones) ஆனது சீன அறிமுகத்தை தொடர்ந்து (சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து) இந்திய சந்தையில் அறிமுகமாவது வழக்கம் தான்!

ஆனால் இந்த முறை அனைத்து சந்தைகளிலும் ஒன்பிளஸ்13டி ஸ்மார்ட்போன் ஆனது அதே பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பலாமல் போகலாம். ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை உலகளாவிய சந்தைகளில் - ஒரு புதிய எஸ்-சீரிஸின் (OnePlus New S-Series) கீழ் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13S) ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (ஏப்ரல் 24) சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 2025 இல் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் லீக்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பெயரிடும் உத்திக்கு பின்னால் உள்ள சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், இது சைனீஸ் வேரியண்ட்-ஐ க்ளோபல் வேரியண்ட்-ல் இருந்து வேறுபடுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கலாம்.
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (OnePlus 13T Specifications):
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 50எம்பி 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமரா டூயல் ரியர் கேமரா செட்டப்
- 16எம்பி செல்பீ கேமரா
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் (OnePlus 13T Price Details):
12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ராயமாக ரூ.39,805
16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.42,150
12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.44,490
16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.46,835
16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.52,690
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் மார்னிங் மிஸ்ட் கிரே, ஹார்ட்-த்ரே பிங்க் மற்றும் கிளவுடி இங்க் பிளாக் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ப்ரீ-ஆர்டர் செய்ய கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் அங்கே விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








