ஏப்ரல் வரை பொறுங்க.. 50எம்பி கேமரா.. 80W சார்ஜிங்.. வருகிறது அட்டகாசமான OnePlus போன். எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அடுத்து ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த போனின் படங்கள் வெளியான நிலையில் தற்போது ஒன்பிளஸ் 13டி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்
ஒன்பிளஸ் 13டி அம்சங்கள் (OnePlus 13T specifications): 6.3-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே (flat OLED display) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite SoC) சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி (IMX906) பிரைமரி கேமரா + 5எம்பி 2எக்ஸ் டெலிபோட்டோ கேமரா ( telephoto camera) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15)சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6200mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 13டி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளிவரும். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஒன்பிளஸ் 13டி போன்.


Click it and Unblock the Notifications








