கொறையாத மவுசு.. மட்ட ரேட்ல OnePlus போன்.. 5850mAh பேட்டரி.. 50MP கேமரா.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் மவுசு குறையாமல் பட்டையை கிளப்பும் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு மற்றும் கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. கிரெடிட் கார்டு இல்லாத கஸ்டமர்களுக்கும் விலை குறைப்பு கிடைக்கும். இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் டிஸ்கவுண்ட் போக ரூ.52,980 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.2,649 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.50,331 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை பேக் செய்துள்ளது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Octa Core Snapdragon 8 Elite 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
அதேபோல 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. பிளஸ் கீ (Plus Key) பீச்சர்களுடன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது. 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) வருகிறது.
இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700 (SONY LYT 700) சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியும் கிடைக்கிறது. டெலிபோட்டோவில் 2X ஆப்டிகல் ஜூமிங் உள்ளது. 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.
டால்பி விஷனில் அவுட்புட் கிடைக்கும். ஆட்டோ போகஸ் மற்றும் கேலக்ஸிகோர் ஜிசி32இ (Galaxycore GC32E) சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவை போலவே இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனுக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5850mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரி இருந்தும், 185 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆனால், 8.15 எம்எம் தடிமன் கிடைக்கிறது. IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட், இன்பிராரெட் சென்சார் உள்ளது. பிளாக் வெல்வெட் (Black Velvet), பிங்க் சாடின் (Pink Satin), கிரீன் சில்க் (Green Silk) கலர்கள் உள்ளன.
இதேபோல டிசைனுடன் கூடுதல் பேட்டரி, பிரீமியம் கேமரா, லேட்டஸ்ட் ஓஎஸ் வேண்டுமானால், மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியான ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.72,999ஆக இருக்கிறது. ரூ.4,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. பீச்சர்கள் மிரளவிடுகின்றன.
இதில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7300mAh பேட்டரி கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ மட்டுமல்லாமல், கூடுதலாக 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








