ரூ.699 மட்டுமே.. OnePlus 13s உடன் சேர்த்து Magnetic கேஸ்கள், 27W மேக்னெட்டிக் போன் கூலர் அறிமுகம்!
ஒன்பிளஸ் நிறுவனம் இன்று (ஜூன் 5) நடந்த வெளியீட்டு நிகழ்வில், ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரவில்லை. இந்த "குறையை" சரிசெய்ய ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து - ஒன்பிளஸ் 13எஸ் மாடலுக்கான மேக்னெட்டிக் கேஸ்கள் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆக்சஸெரீயையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் 13எஸ் மேக்னெட்டிக் கேஸ்கள்: இது 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 13எஸ் மாடலுக்கான ஸ்டேண்ட்ஸ்டோன் மேக்னெட்டிக் கேஸ் (OnePlus 13s Sandstone Magnetic Case) ஆனது ஒரு பாரம்பரிய வடிவமைப்பை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ஹோல் பேட்டர்ன் மேக்னெட்டிக் கேஸ் ஆனது பெயர் குறிப்பிடுவது போலவே துளைகளுடன் வருகிறது; இது நல்ல பிடிமானத்தை வழங்கும்.

27W ஃப்ரீசிங் பாயிண்ட் மேக்னெட்டிக் போன் கூலர் (27W freezing point magnetic phone cooler): இது கேமிங் செய்யும் போது ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்திருக்கும. இது யூஎச்பி இன்புட் மூலம் சக்தியை பெறுகிறது, மேலும் மேக்னெட்டிக் சார்ஜிங்கிற்கான ஆதரவு உள்ள எந்த ஸ்மார்ட்போன் உடனும் எளிதாக இணைக்க முடியும். மேக்நாட் அல்லாத டிவைஸ்கள் உடன் கிளிப் உதவி உடன் பாதுகாப்பாக இணைக்க முடியும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிற்கும் இணக்கமானது.
இது ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சரியாக பொருந்தும், ஆக இதன் வட்ட வடிவமைப்பு உங்கள் கைகளை தடுக்காது. கூடுதலாக இது 27W பவர் கூலிங் + TEC கூலிங் + டர்போ கூலிங் போன்ற பல குளிரூட்டும் அம்சங்களுடன் வருகிறது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் கிளாசிக் கலர் ஆப்ஷனை ஏற்றுக்கொள்கிறது. மேலும் இது பில்ட் இன் தடையாய் ஸ்பீட் இ-ஸ்போர்ட்ஸ் அட்மாஸ்பியர் லைட்டையும் (built-in two-speed e-sports atmosphere light) கொண்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
- ஒன்பிளஸ் 13எஸ் ஸ்டேண்ட்ஸ்டோன் மேக்னெட்டிக் கேஸ் - ரூ.799
- ஒன்பிளஸ் 13எஸ் ஹோல் பேட்டர்ன் மேக்னெட்டிக் கேஸ் - ரூ.699
- ஒன்பிளஸ் 27W ஃப்ரீசிங் பாயிண்ட் மேக்னட்டிக் போன் கூலர் - ரூ.2499
இந்த அனைத்து ஆக்சஸெரீஸ்களும் இன்று (ஜூன் 5 ஆம் தேதி) முதல் வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 12GB + 512GB ஆப்ஷன் ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் வெல்வெட், க்ரீன் சில்க் மற்றும் பிங்க் சாடின் 3 ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும்
ஹைஹர் வெர்ஷன் ஆனது பிளாக் மற்றும் க்ரீன் கலர்களில் மட்டுமே வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 12 ஆம் தேதி முதல் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா இ-ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் 13எஸ் ப்ரீ-ஆர்டர்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.5,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளையும் பெறலாம் மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தையும் பெறலாம்
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- 5850mAh பேட்டரி


Click it and Unblock the Notifications