இந்த ஒரு காரணத்துக்காகவே OnePlus 13 வாங்கலாம்!! சுவாரஸ்யமாக வெளியான தகவல்..
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) சாதனமான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) சாதனத்தை 2025 இல் அறிமுகமாகவிருக்கிறது. இது பற்றிய புதிய தகவல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் 12 சீரிஸ் (OnePlus 12 Series) தொடரை அறிமுகம் செய்து சில வாரங்களே ஆகியுள்ளது. இந்த புதிய சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இப்போது இதற்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் 13 சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்பார்க்கபடுக்கும் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதனமானது ஒன்பிளஸ் 13 (OnePlus 13) என்ற பெயருடன் வரும் 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் 13 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் புதிய டிசைன் உடன் வரும் என்று சமீபத்திய லீக் தகவல் குறிப்பிடுகிறது.
ஒன்பிளஸ் 13 (OnePlus 13):
உண்மையை சொல்ல போனால், ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro), ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான கேமரா அமைப்பை கொண்டிருந்தன. இந்த டிசைன் போக்கு வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் சாதனத்துடன் மாறப்போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது பெரும்பாலான OEM-கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 4 சிப்செட் (Qualcomm Snapdragon Gen 4 SoC) கொண்ட சாதனங்களை உருவாக்கி சோதனை செய்து வருகிறது. இந்த சாதனங்கள் 2025 இல் சிறந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிவைஸ்களாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தகவலின் படி, ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்னாப்டிராகன் ஜென் 4 சிப் உடன் ஒரு புதிய ப்ரோட்டோடைப் சாதனத்தை சோதனை செய்து வருகிறது. இந்த ப்ரோட்டோடைப் சாதனம் புதிய கேமரா டிசைன் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் இந்த ஒன்பிளஸ் 13 (OnePlus 13) டிசைன் ஆரம்பகட்டத்தில் இருப்பதனால், இன்னும் இது என்னென்ன மேம்படுத்தல்களை பெரும் என்பது தெரியவில்லை.
வரும் மாதங்களில் இந்த ஒன்பிளஸ் 13 (OnePlus 13) சாதனம் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சமீபத்திய சாதனங்களில் எந்தவித டிசைன் மாறுபாட்டையும் அறிமுகம் செய்யவில்லை. ஆகையால், புதிய ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனில் என்ன மாற்றங்களை நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, நீங்கள் OnePlus 12 தொடரை வாங்க விரும்பினால், அதை நீங்கள் இந்தியாவில் ஆன்லைன் வழியாக வாங்கலாம். OnePlus 12R இப்போது சிறந்த பட்ஜெட் தேர்வாக இந்தியா மற்றும் உலக சந்தையில் வாங்க கிடைக்கிறது. OnePlus 13 இன் ரெண்டர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆன்லைனில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 12 தொடரில் Qualcomm Snapdragon 8 Gen 3 சிப் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Click it and Unblock the Notifications








