Home
News

சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ்.. அதே விலைக்கு OnePlus 12R.. கொஞ்சம் காஸ்ட்லீயாக OnePlus 12.. ஆர்டர் தெறிக்க போகுது!

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் உலகின் கவனமும் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் மீதுதான் உள்ளது. இது டிசம்பர் 5 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து 2024 ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் சீன அறிமுகத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) என்கிற புதிய மாடலும் சீனாவில் அறிமுகமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இது ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) என்கிற பெயரின்கீழ் வெளியிடப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அதே விலைக்கு OnePlus 12R.. கொஞ்சம் காஸ்ட்லீயாக OnePlus 12!

ஒருவேளை ஒன்பிளஸ் 12 கொஞ்சம் காஸ்ட்லீயாக இருக்குமென்று நீங்கள் நினைத்தால், அப்பர் மிட்-ரேன்ஜ் பிரிவில் வரும் ஒன்பிளஸ் 12ஆர்-ஐ நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அப்படியாக, ஒன்பிளஸ் 12ஆர் என்ன விலைக்கு வரும்? எனின் அம்சங்களை பேக் செய்யும்? ஒன்பிளஸ் 12-ன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 12ஆர் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஐஎம்டிஏ (IMDA) மற்றும் சிக்யூசி (CQC) இணையதளங்கள் வழியாக கிடைத்த தகவல்களின்படி, இது 100வாட்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவை (100W Wired Charging Support) கொண்டிருக்கும். அதாவது இந்த புதிய மாடல் அதன் முன்னோடியான ஒன்பிளஸ் 11ஆர் மாடலின் சார்ஜிங் ஸ்பீட்-ஐ தக்கவைத்துக் கொள்ளும்.

அதே விலைக்கு OnePlus 12R.. கொஞ்சம் காஸ்ட்லீயாக OnePlus 12!

மேலும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset) மூலம் இயக்கப்படலாம். ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் 11ஆர் மாடலானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை (Snapdragon 8 Plus Gen 1 SoC) பேக் செய்கிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே இடம்பெறுமென்று கூறப்படுகிறது. இதில் 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.7-இன்ச் பிஓஇ எக்ஸ்1 ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

அதே விலைக்கு OnePlus 12R.. கொஞ்சம் காஸ்ட்லீயாக OnePlus 12!

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் "வழக்கம் போல" ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரும். பெரும்பாலும் ஒன்பிளஸ் 11ஆர் மாடலில் உள்ள 50எம்பி சோனி IMX890 மெயின் கேமராவும், 8எம்பி அல்ட்ராவைட் கேமராவும் தக்கவைத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2எம்பி மேக்ரோ கேமராவானது 32எம்பி 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 12ஆர் ஆனது நிச்சயம் நல்ல மேம்பாடுகளை பெறும். இது சற்றே பெரிய 5500mAh பேட்டரியை பேக் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி யூனிட் உள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களை விட ஒன்பிளஸ் 12ஆர் மாடலின் விலைதான் இன்னும் சுவாரசியமான விஷயமாக இருக்கிறது.

ஒன்பிளஸ் 12ஆர் என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் இது ரூ.39,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி மாடலும் கூட தற்போது ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வந்தாலும் கூட ஒன்பிளஸ் 12ஆர் ஆனது ஒன்பிளஸ் 11ஆர்-ன் விலைக்கே வெளியாகும் என்பது போல் தெரிகிறது.

ஒன்பிளஸ் 12 என்ன விலைக்கு வரும்? இதுவும் கூட ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்துடன் ஒற்றுப்போகும் என்று கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 ரூ.59,999 க்கு அறிமுகமானது; தற்போது (பிளிப்கார்ட்டில்) ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதன் அடிப்படையில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.60,000 முதல் ரூ.65,000 க்குள் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் (அதாவது லீக்ஸ் தகவல்கள் மட்டுமே வெளியான நேரத்தில்) ஒன்பிளஸ் 12 ரூ.80,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்றெல்லாம் கூறப்பட்டது. பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்ததும், லீக்ஸ் தகவல்கள் தவிடுபொடியானது!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R Launch Date Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X