Home
News

OnePlus 12R: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. புது போன் வாங்குற ஐடியா இருக்கா? பட்ஜெட் | பிளாக்ஷிப் ரெண்டும் வருது..

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் உலக சந்தையிலும், இந்தியாவிலும் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன் சேர்த்து நிறுவனம் அதன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 மாடலையும் அறிமுகம் செய்கிறது.

ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுக தேதி ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சொந்த சந்தையில் (சீனா) ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) சாதனத்தை ஜனவரி 4ம் தேதி வெளியிடவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒன்பிளஸ் 12 என்று அறிமுகமாகிறது.

OnePlus 12R: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. புது போன் வாங்குற ஐடியா இருக்கா

இந்த அறிமுக நிகழ்வு ஒரே நேரத்தில் 3 நாடுகளில் நடத்தப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக வட அமெரிக்கா (North America), ஐரோப்பா (Europe), மற்றும் இந்தியா (India) போன்ற நாடுகளில் ஒரே நாளில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R சாதனத்தை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R இந்திய அறிமுகம் தேதி (OnePlus 12 and OnePlus 12R Launch Date India):

ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களுடன் தொடங்கும் என்று இண்டஸ்ட்ரி டிப்ஸ்டர் இஷான் அகர்வால் வெளிப்படுத்துகிறார். இது 16 ஜிபி + 256 ஜிபி வகையிலும் வழங்கப்படும். இது அதன் முன்னோடி, அதாவது OnePlus 11R போன்றது என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாதனம் அயர்ன் கிரே (Iron Grey) மற்றும் கூல் ப்ளூ (Cool Blue) வண்ணங்களில் வரும்.

இதற்கிடையில், பிளாக்ஷிப் OnePlus 12 இன் அடிப்படை மாடல் இப்போது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலை கொண்டிருக்கும். OnePlus 12 ஆனது 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடனும், 16GB + 512GB ஸ்டோரேஜ் மாடலாகவும் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதல் விருப்பமாக இந்திய சந்தையில் 1TB மாடல் கூட அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஃப்ளோவி எமரால்டு (Flowy Emerald) மற்றும் சில்க்கி பிளாக் (Silky Black) வண்ண விருப்பங்களில் வழங்கப்படும். ஒன்பிளஸ் 12 ஒரு பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். அதேசமயம் ஒன்பிளஸ் 12R ரீபேட்ஜ் செய்யப்பட்ட ஒன்ப்ளஸ் ஏஸ் 3 மாடலின் மறுபெயரிடப்பட்ட மாடலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய கசிவின்படி, முந்தையது ரூ 58,000 முதல் ரூ 60,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் OnePlus 12R ரூ 40,000 முதல் ரூ 42,00 வரை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் இயற்பட்ஸ் வரிசையில் புதிதாக ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.12,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு இந்த புத்தாண்டு அமோகமாக இருக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரசிகர்களை குஷி அடைய செய்ய ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்தை நிறுவனம் வெளியிடுகிறது. பட்ஜெட் ரசிகர்களை மகிழ்ச்சி செய்ய ஒன்பிளஸ் 12R சாதனத்தை நிறுவனம் வெளியிடுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oneplus 12R and OnePlus 12 Launch Date In India OnePlus Buds 3 Earbuds Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X