Home
News

இதுக்கு தானே தவம் கிடந்தோம்! OnePlus 12-ஐ ஓரங்கட்டுங்க! மிட்-ரேன்ஜ் விலையில் இந்த புது ஒன்பிளஸ் மாடலை பாருங்க!

ஒன்பிளஸ் என்றதுமே ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) எப்போது அறிமுகமாகும்? இந்தியாவில் அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்கிற கேள்விகள் மேலோங்கும் அளவிற்கு.. இந்த "அப்கம்மிங் ஸ்மார்ட்போன்" மீது பெரிய அளவிலான எதிர்பார்புகள் உள்ளன.

இருப்பினும் ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயமானது (Expected Price in India), இந்த மாடலை வாங்கும் ஆர்வம் கொண்ட பலரையும் பின்வாங்க வைத்துள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் இந்தியாவில் இது ரூ.80,000 என்கிற பட்ஜெட்டை தொடலாம் என்று கூறப்படுகிறது.

அட OnePlus 12-ஐ விடுங்க.. மிட்-ரேன்ஜ் விலையில் புது OnePlus மாடல்!

என்னது ரூ.80,000-ஆ? என்று நீங்களும் ஷாக் ஆகும் பட்சத்தில், உங்களுடைய முழு கவனத்தையும், இதே ஒன்பிளஸ் 12 சீரீஸின் கீழ் அறிமுகமாகவுள்ள இன்னொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G) மீது மாற்றிக்கொள்ளவும். இது ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி-ஐ போலவே மிட்-ரேன்ஜ் விலைக்கு அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 2 (OnePlus Ace 2) என்கிற பெயரின்கீழ் அறிமுகமான மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) ஆக அறிமுகம் செய்யப்பட்டதை போலவே, இந்த முறையும் சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஆக அறிமுகமாகும் மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் ஆக வெளியாகும்.

அட OnePlus 12-ஐ விடுங்க.. மிட்-ரேன்ஜ் விலையில் புது OnePlus மாடல்!

ஒன்பிளஸ் ஏஸ் 3 5ஜி / ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும்? இது பெரும்பாலும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலையோடு ஒற்றுப்போகலாம். அதாவது இது ரூ.40,000 க்குள் என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம், இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், ஹைஎண்ட் 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.44,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

அட OnePlus 12-ஐ விடுங்க.. மிட்-ரேன்ஜ் விலையில் புது OnePlus மாடல்!

ஒன்பிளஸ் ஏஸ் 3 5ஜி / ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? சமீபத்திய கீக்பென்ச் லிஸ்டிங்கின்படி (Geekbench Listing), ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஒசி ஆனது 3.19GHz இல் க்ளாக் செய்யப்பட்ட ப்ரைம் சிபியு கோர் (Prime CPU Core) உடனான ட்ரை-கிளஸ்டர் கட்டமைப்பை (Tri-cluster architecture) கொண்ட சிப்செட் ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Android 13 OS) மற்றும் 16ஜிபி ரேம் (16GB RAM) போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். கேமராக்களை பொறுத்தவரை, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா பேக் செய்யப்படலாம்.

இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் (Triple Rear Camera Setup) 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.

ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி எப்போது அறிமுகமாகும்? நிச்சயம் இது ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனிற்கு பிறகே அறிமுகம் செய்யப்படும். எதிர்பார்க்கப்படும்படி ஒன்பிளஸ் 12 ஆனது 2024 ஜனவரியில் அறிமுகமாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி மாடலானது 2024 மார்ச்சில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12R 5G AKA OnePlus Ace 3 Specs Surfaced Geekbench
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X