Home
News

டிச.5-க்கு பிறகு OnePlus 11 விலை குறையலாம்.. எவ்ளோ குறைச்சாலும் வாங்கிடாதீங்க.. 3 காரணங்கள்!

சீனாவில் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்திய அறிமுகமானது (India Launch ) 2024 ஜனவரி 23 அல்லது 24 இல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் அறிமுகமானதும் ஓராண்டு பழைய மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மீது விலைக்குறைப்பை (Price Cut) அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை ஒன்பிளஸ் 11 மாடலின் விலை குறைக்கப்பட்டாலும் கூட, அதை ஏன் வாங்காமல் இருப்பதே நல்லது.

OnePlus 11 விலை குறையலாம்! எவ்ளோ குறைச்சாலும் வாங்கிடாதீங்க!

ஏனென்றால், ஒன்பிளஸ் 12-ன் விலையானது ஒன்பிளஸ் 11-ன் விலை நிர்ணயதோடு ஒற்றுப்போகும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் 12 ஆனது அதிகபட்சம் ரூ.65000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 இந்தியாவில் ரூ.56,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

விலை நிர்ணயத்தை விட முக்கியமான விஷயம் என்னவென்றால்.. ஒன்பிளஸ் 11 உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 12 ஆனது 3 இடங்களில் பெரிய அளவிலான மேம்பாடுகளை (Upgrades) பெறவுள்ளதும். இதைத்தான் ஒன்பிளஸ் 11-ஐ வாங்காமல் தவிர்ப்பதற்கான 3 காரணங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். அதென்ன மேம்பாடுகள் / காரணங்கள்? இதோ விவரங்கள்:

OnePlus 11 விலை குறையலாம்! எவ்ளோ குறைச்சாலும் வாங்கிடாதீங்க!

01. கேமரா: ஒன்பிளஸ் 12 ஆனது ஒன்பிளஸ் ஓப்பனில் (OnePlus Open) உள்ள கேமரா அசெட்டப்பை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது இந்த பிராண்டின் மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாகும். இந்தியாவில் இதன் விலை ரூ.1,39,999 ஆகும்.

அப்படியான ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா சென்சார்கள் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ளன. ஒன்பிளஸ் 12-ல் சோனி எல்ஒய்டி-808 சென்சார் கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா (Ultra wide angle Camera) + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு (3x Optical Zoom Support) உடனான 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா (Telephoto Camera) இடம்பெறும்.

OnePlus 11 விலை குறையலாம்! எவ்ளோ குறைச்சாலும் வாங்கிடாதீங்க!

02. புதிய டிஸ்பிளே டெக்னாலஜி: ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் மழைக்காலத்திலும் செயல்படும் திறன்கொண்ட டிஸ்பிளே இருக்கும். ஒன்பிளஸ் இதை ரெயின்வாட்டர் டச் (Rainwater Tpuch) டெக்னாலஜி என்கிறது. இது தவிர ஒன்பிளஸ் 12 டிஸ்பிளேவானது 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (4500nits Peak Brightness) உடன் வரும். இது மார்க்கெட்டின் ப்ரைட் ஆன டிஸ்பிளேவாக இருக்கும்; கடுமையான சூரிய ஒளியில் கூட டிஸ்பிளேவின் தெரிவுநிலை மிகவும் நன்றாக இருக்கும்.

03. சிப்செட்: ஒன்பிளஸ் 12 ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) மூலம் இயக்கப்படும் இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சிப்செட் 2024 ஆம் ஆண்டில் அறிமுகமாகும் அனைத்து ஃபிளாக்ஷிப் போன்களையும் (Flagship Phones) இயக்க தயாராக உள்ளது. பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் அல்ட்ரா-பிரீமியம் போன்களில் (Ultra Premium Phones) இந்த சிப்செட்டை உறுதிசெய்துவிட்டன.

சமீபத்தில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது தரப்படுத்தல் இணையதளத்தில் 23,33,033 புள்ளிகளை பெற்றுள்ளதாகவும், இது ப்ரைம் ஸ்கோர் பிளாட்ஃபார்மில் மிக உயர்ந்த ஸ்கோராகும் என்கிற தகவல் வெளியானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அளவிலான செயல்திறனை அடைய சக்திவாய்ந்த வேப்பர் கூலிங் சிஸ்டமை (Vapour cooling system) பயன்படுத்தியதே காரணம் என்றும் கூறப்படுகிறது

மொத்தத்தில் "கிட்டத்தட்ட" ஒரே மாதிரியான விலையில் கிடைக்க உள்ள ஒன்பிளஸ் 11 மற்றும் ஒன்பிளஸ் 12 ஆகிய இரண்டிற்கும் நடுவில்.. ஒன்பிளஸ் 11-ஐ தவிர்த்துவிட்டு புதிய ஒன்பிளஸ் 12-ஐ வாங்குவதே சிறந்த முடிவாக இருக்கும். அதற்கு நாம் மேற்கண்ட 3 காரணங்களும் முக்கிய பங்காக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Vs OnePlus 11 Changes Differences Upgrades
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X