Home
News

என்னது 2.3 மில்லியன்-ஆ.. இந்த 1 காரணம் போதுமே.. OnePlus 12-ஐ கண்ண மூடிக்கிட்டு வாங்க!

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. டிசம்பர் 5 ஆம் தேதியன்று நடக்கும் சீன அறிமுகத்தை தொடர்ந்து இது ஜனவரி 24 ஆம் தேதியன்று இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டு நாள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், ஒவ்வொரு நாளும் ஒன்பிளஸ் 12 பற்றிய "வேற லெவல் அப்டேட்கள்" தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன. முன்னதாக இது ரூ.80,000 பட்ஜெட்டில் வெளியாகாது; மாறாக ஒன்பிளஸ் 11-ஐ போலவே ரூ.60,000 பட்ஜெட்டில் தான் வரும் என்கிற தகவல் வெளியாகி இருந்தது.

இந்த 1 காரணம் போதுமே.. OnePlus 12-ஐ கண்ண மூடிக்கிட்டு வாங்க!

அதன் பின்னர் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் இடம்பெறும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா (Ultra wide Angle Camera) மற்றும் டெலிஃபோட்டோ (Telephoto) கேமராவானது (ஃபோல்டபிள் போன்களான) ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) மற்றும் ஒப்போ பைண்ட் என்3 (Oppo Find N3) ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா சென்சார்களுடம் ஒற்றுப்போகும் என்கிற தகவல் வெளியானது.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் பல அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் அன்டுடு பெர்ஃபார்மென்ஸ் பெஞ்ச்மார்க்கிங் பிளாட்ஃபார்மில் (AnTuTu Performance Benchmarking Platform) 2.3 மில்லியன் பாயிண்ட்களை பெற்று மிக உயர்ந்த தரவரிசையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 1 காரணம் போதுமே.. OnePlus 12-ஐ கண்ண மூடிக்கிட்டு வாங்க!

சீன சமூக ஊடகமான வெய்போ வழியாக, நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது தரப்படுத்தல் இணையதளத்தில் 23,33,033 புள்ளிகளை பெற்றுள்ளது. இது ப்ரைம் ஸ்கோர் பிளாட்ஃபார்மில் மிக உயர்ந்த ஸ்கோர் ஆகும்.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் பகிர்ந்துள்ள ஸ்க்ரீன்ஷாட்டின்படி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் சிபியு ஸ்கோர் (CPU Score) 5,33,566, ஜிபியு ஸ்கோர் (GPU Score) 9,04,961 மற்றும் எம்இஎம் (MEM category) பிரிவில் 5,38,511 புள்ளிகளையும், யுஎக்ஸ் (UX) பிரிவில் 3,55,995 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

இந்த 1 காரணம் போதுமே.. OnePlus 12-ஐ கண்ண மூடிக்கிட்டு வாங்க!

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது இந்த அளவிலான செயல்திறனை அடைய சக்திவாய்ந்த வேப்பர் கூலிங் சிஸ்டமை (Vapour cooling system) பயன்படுத்தியதே காரணம் என்று கூறப்படுகிறது. இதற்காக ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் கேமிங் செயல்திறனை மேம்படுத்த கேம் டெவலப்பர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சிப்மேக்கர்களுடன் ஒத்துழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம், இது குவால்காமின் லேட்டஸ்ட் ப்ராசஸர் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படும் என்பது ஆரம்பத்திலேயே உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இது கேமிங்கிற்கான இன்-பில்ட் நியூ ஜெனரேஷன் எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டாரை (In-built new generation X-axis motor) உள்ளடக்கும்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உறுதி செய்யப்பட்ட மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 2கே ரெசல்யூஷன், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14-ஐ கொண்டிருக்கும். கேமராவை பொறுத்தவரை ஹாசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும்.

கேமரா சென்சார்களை பொறுத்தவரை, இதில் சோனி எல்ஒய்டி 808 சென்சார் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு உடனான 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராக்கள் பேக் செய்யப்படும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் விலையுடன் ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.56,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக ஒன்பிளஸ் 12-ன் விலை நிர்ணயம் ரூ.65,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நல்லது!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Tops AnTuTu Benchmark Powerful Vapour Cooling System Launch Dec 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X