Home
News

எல்லாரும் ஓடிடுங்க.. ஒட்டுமொத்த போனையும் பேக்கில் ஓடவிட்ட ஒன்பிளஸ்.. தெறி கேமராவுடன் புது OnePlus 12..

யார்பா சொன்னது ஐபோன் கேமரா மட்டும் தான் பெஸ்ட்னு? ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூட சில சாதனங்களில் ஐபோனுக்கு நிகரான கேமரா அம்சங்கள் எல்லாம் இப்போது பேக் செய்யப்பட்டுவிட்டன. உண்மையை சொல்ல போனால், ஐபோன் கேமரா தரத்தை விஞ்சும் போன்கள் எல்லாம் வந்துவிட்டன.

கேமரா தரத்தில் ஐபோனுக்கு (iPhone) நிகர் எதுவுமே இல்லை என்று என்ன தான் ஆப்பிள் (Apple) ரசிகர்கள் சீன்போட்டு கொண்டாலும், ஆண்ட்ராய்டு (Android) போன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து, மேம்பட்டு வருகிறது. அந்த வகையில், தரமான கேமரா அம்சத்தை (best camera phone) வழங்கும் பிராண்டுகளில் முதன்மையான நிறுவனமாக திகழ்வது ஒன்பிளஸ் மட்டுமே.

எல்லாரும் ஓடிடுங்க.. ஒட்டுமொத்த போனையும் பேக்கில் ஓடவிட்ட ஒன்பிளஸ்..

ஹசெல்ப்லட் (Hasselblad) டியூனிங் உடன் அதன் ஸ்மார்ட்போன் கேமராக்களை நிறுவனம் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. இந்த வரிசையில், ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சத்தையும் விஞ்சும் அளவிற்கு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இப்போது அதன் புதிய சாதனத்தில் உள்ள கேமராக்களை டியூன் செய்துள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து காட்டியுள்ளது. அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் அதன் புதிய சாதனமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. சீன சந்தைக்கான OnePlus 12 இன் வெளியீட்டு தேதியை OnePlus இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ஒன்பிளஸ் 12 (OP12) இந்த மாதம் வெளியிடப்படும் என்று வதந்திகள் கூறுகின்றன.

எதிர்பார்க்கப்படும் வெளியீட்டிற்கு முன்னதாக, ஒன்பிளஸ் நிறுவனத்தின் சீன தலைவர் லி ஜிஏ லூயிஸ் (Li Jie Louis) ஒன்பிளஸ் 12 இன் சில கேமரா சாம்பிள் படங்களை வெளியிட்டிருக்கிறார். லீ ஜீயின் வெய்போ இடுகையின் பதிவில், அவர் ஒன்பிளஸ் 12 கேமரா செயல்திறனை மற்ற பிராண்ட் போன்களில் படங்களுடன் ஒப்பீட்டு காண்பித்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

கேள்விக்குரிய படங்கள் ஒன்பிளஸ் 12 மற்றும் மற்றொரு "ப்ரோ" பிராண்டட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான சியோமி 14 ப்ரோவுடன் எடுக்கப்பட்ட கேமரா காட்சிகளின் பக்கவாட்டு மதிப்பீடாகத் தெரிகிறது. எந்த கேமரா மாதிரி எந்த தொலைபேசியுடன் ஒத்துப்போகிறது என்பது வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சிறந்த முடிவுகளைக் காண்பிக்கும் மாடலாக ஒன்பிளஸ் 12 இன் கேமரா படங்கள் இருக்கிறது.

ஒன்பிளஸ் 12 சமீபத்திய சோனி லைட்டியா (Sony Lytia) கேமரா சென்சாரை பயன்படுத்தியுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதைச் சுற்றியுள்ள வதந்திகள், அதே LYT-T808 முதன்மை கேமராவுடன் பொருத்தப்படலாம் என்று கூறுகின்றன, இதே சென்சார் ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) போனில் இடம்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அல்ட்ரா-வைட் ஷாட்களுக்கான 48 மெகாபிக்சல் IMX581 லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், 64 மெகாபிக்சல் ஓம்னிவிஷன் (OmniVision) OV64B பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 5x ஆப்டிகல் ஜூம் ஆதரவு போன்ற முக்கியமான ஸ்னாப்பருடன் ஒன்பிளஸ் 12 இணைக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஆனது புதிய தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட்டைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,400mAh பேட்டரியில் இருந்து சக்தி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12 ஆனது BOE X1 வளைந்த விளிம்பு கொண்ட கர்வுடு டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 2K தெளிவுத்திறன், 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் 3,000 nits பீக் பிரைட்னஸ் போன்றவற்றை ஆதரிக்கும். இது ColorOS 14 (சீனா) / OxygenOS 14 (உலகளாவிய) அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 உடன் முன்பே ஏற்றப்படும். இது ஜனவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
OnePlus 12 Sony Lytia Camera Sensor Samples Vs Camera Shots From Other Competitor Phones Compared
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X