Home
News

OnePlus 12 விற்பனை இன்று முதல்: நாடே காத்து கிடந்த OnePlus 12 போனின் விலை என்ன? சலுகைலாம் இருக்கா?

வெயிட்டிங் ஓவர்.. நீண்டகாலமாக காத்திருந்த காத்திருப்பு ஒருவழியாக இன்று நிறைவடைகிறது. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் சாதனம் இன்று மதியம் 12 மணி முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. இதன் விற்பனை விலை மற்றும் சலுகை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Latest flagship smartphone) மாடலாக ஒன்பிளஸ் 12 சாதனம் இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இதன் விற்பனை இன்று மதியம் முதல் துவங்குகிறது. இதன் விற்பனை ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் (oneplus.in), அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் சில்லறை விற்பனையாளர் வழியாக வாங்க கிடைக்கிறது.

OnePlus 12 விற்பனை இன்று முதல்: நாடே காத்து கிடந்த OnePlus 12 விலை?

புதிய ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் சாதனத்தின் சிறப்பம்சம் பற்றிய விபரங்களை முதலில் பார்த்துக்கொள்ளலாம். இந்த புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சாதனம் 6.82" இன்ச் கொண்ட 120Hz ProXDR QHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆக்குவா டச் அம்சத்துடன் வருகிறது. இந்த அம்சம் டிஸ்பிளேவில் நீர் துளிகள் இருந்தாலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 12 விற்பனை இன்று (OnePlus 12 sale starts today):

ஆக்குவா டச் (Aqua touch) அம்சத்துடன் வெளிவரும் முதல் டிஸ்பிளே இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 2K திறனுடன் வருகிறது. இது 4500 பீக் பிரைட்னஸ் உடன் LTPO அம்சத்தை ஆதரிக்கிறது. இந்த டிஸ்பிளே HDR10+, HDR Vivid, டால்பி விஷன் (Dolby vision), டிஸ்பிளே மேட்+ (DisplayMate+) அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சாதனம் அதிக சக்தி வாய்ந்த புதிய தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 Soc) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 12GB | 16GB LPDDR5X ரேம் உடன் 256GB | 512GB கொண்ட ஸ்டோரேஜ் (Storage) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் ஹசல்ப்ளாட் (Hasselblad) டியூனிங் உடன் வருகிறது.

OnePlus 12 விற்பனை இன்று முதல்: நாடே காத்து கிடந்த OnePlus 12 விலை?

இது 50MP + 64MP+ 48MP திறன் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரைமரி கேமரா 50MP சோனி LYT-808 உடன் OIS ஆதரவை கொண்டுள்ளது. இதில் உள்ள 64MP சென்சார் 3X பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஸ்டூடியோ-லெவல் போர்ட்ரெய்ட் அம்சத்துடன் வருகிறது. இறுதியாக இதன் 48MP சென்சார் அல்ட்ரா-வைட் 114° Fov உடன் செயல்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 14 உடன் ஆக்சிஜன் ஓஎஸ் (Android 14 Oxygen OS) இயங்குதளத்துடன் இந்த ஒன்பிளஸ் 12 சாதனம் செயல்படுகிறது. இந்த புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) 5400mAh பேட்டரி (battery) உடன் வருகிறது. இது அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் (Ultra fast charging) அம்சத்துடன் மிகவும் வேகமாக சார்ஜ் செய்கிறது.

ஒன்பிளஸ் 12 விலை (OnePlus 12 Price):

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சாதனம் 100W SUPERVOOC வயர்டு சார்ஜிங் உடன் அல்ட்ரா பாஸ்ட் 50W வயர்லெஸ் சார்ஜிங் (wireless charging) அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 மணி நேர ஹெவி கேமிங் உடன் 19 மணி நேர யூடியூப் பிளேபேக் அம்சத்தை வழங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், ஒன்பிளஸ் 12 போனின் 12GB | 256GB வேரியண்ட் ரூ.64,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

இதன் 16GB | 512GB ரூ.69,999 விலையிலும் இன்று விற்பனைக்கு வருகிறது. இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சாதனம் பிளோவி எமரால்டு (Flowy Emerald) மற்றும் சில்கி பிளாக் (Silky Black) நிறங்களில் வருகிறது. அறிமுகம் சலுகையாக பல வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Smartphone Sale Starts Today January 30th Via Amazon Oneplus India Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X