ஓ மை காட்.. OnePlus 12 விலை இவ்வளவு-ஆ? ஜன.23 அறிமுகம்.. ஒன்பிளஸ் 11ஐ தூக்கி சாப்டுடுச்சே பாஸ்..
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்தை ஜனவரி 23ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. அறிமுகத்திற்கு முன்பாக இதன் விலை பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் சாதனத்தின் அறிமுகம் கடந்த மாதம் சீனாவில் நடைபெற்றது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்குள் கால்பதிக்கிறது. இதற்கு முன்பு வரை இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விபரங்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது.

ஆனால், இப்போது அமேசான் பட்டியல் புதிய ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களுடன் விலை பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 12ஜிபி ரேம் மற்றும் 356ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.69,999 விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் சாதனத்தின் அடிப்படை வேரியண்ட் மாடலே 12ஜிபி ரேம் உடன் 256ஜிபி ஸ்டோரேஜ்ஜை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் 11 சாதனம் இந்திய சந்தையில் 8ஜிபி ரேம்128ஜிஜேபி ஸ்டோரேஜ் உடன் ரூ.56,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சாதனத்தின் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்தியாவில் ரூ.61,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஒன்பிளஸ் 12 சாதனத்தின் விளையாடு ஒன்பிளஸ் 11 விலையை ஒப்பிட்டு பார்க்கையில், இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சாதனத்தின் அடிப்படை மாடல் ரூ.56,999 விலையில் வந்தது. மறுபுறம், ஒன்பிளஸ் 12 சாதனம் இப்போது ரூ.69,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய முந்த மாடலை விட, இந்த ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ரூ.13,000 விலை அதிகமாகவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
- 2K ரெசல்யூஷன் டிஸ்பிளே
- 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
- 12ஜிபி | 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி | 512ஜிபி | 1TB ஸ்டோரேஜ்
- 50எம்பி + 48எம்பி + 3X ஜூம் உடன் 64எம்பி ட்ரிபிள் கேமரா அம்சம்
- ஹாசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 5400mAh பேட்டரி
- 100W வயர்டு சூப்பர்வூக் சார்ஜிங்
- 50W வயர்லெஸ் சார்ஜிங்
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் 12 சாதனத்துடன் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் சாதனத்தையும் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








