Home
News

அப்படி போடு.. மொத்த இந்தியர்களும் ஹேப்பி அண்ணாச்சி.. முத்தான விலைகளில் 3 புதிய OnePlus தயாரிப்புகள்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் 2024 ஜனவரி 23 ஆம் தேதி அன்று ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் (Smooth Beyond Belief) என்கிற வெளியீட்டு நிகழ்வை (Launch Event) நடத்துகிறது. இந்நிகழ்வில் 3 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் இந்திய சண்டையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் நிகழ்வு சரியாக எத்தனை மணிக்கு தொடங்கும்? இந்நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்வது எப்படி? இதில் என்னென்ன புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

முத்தான விலைகளில் 3 புதிய OnePlus தயாரிப்புகள்!

ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் - லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்: இந்நிகழ்வு புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பேடிஎம் இன்சைடர் (PayTM Insider மற்றும் ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் (OnePlus Online Store) வழியாக டிக்கெட்டுகளை வாங்கலாம். இலவசமாக, ஆன்லைன் வழியாக பார்க்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் இணையதளம், ஒன்பிளஸ் யூட்யூப் வழியாக ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் நிகழ்வை நேரலையில் பார்க்கலாம்.

என்னென்ன புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகமாகும்? ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் நிகழ்வில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன்கள், மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) இயர்பட்ஸ் என மொத்தம் 3 புதிய தயாரிப்புகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

முத்தான விலைகளில் 3 புதிய OnePlus தயாரிப்புகள்!

ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸின் அம்சங்கள்: இது ஃபுல் சார்ஜில் 44 மணிநேர பிளேபேக் டைம், 10 நிமிட சார்ஜில் 7 மணிநேரம் வரையிலான லிசனிங் டைம், ஆக்டிவ் நைஸ் கேன்சலேஷன் (ANC) ஆன் செய்யப்பட்டால் சிங்கிள் சார்ஜில் 6.5 மணிநேரம் பிளேபேக் டைம், சார்ஜிங் கேஸ் வழியாக கூடுதலாக 28 மணிநேரம் வரையிலான பிளேபேக் டைம் கிடைக்கும்

இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் 3 விலை: சீனாவில் இது ஏற்கனவே அறிமுகமாகி விட்டது. அங்கே ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.5,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக இந்திய விலை நிர்ணயமானது இதைச்சுற்றி தான் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

முத்தான விலைகளில் 3 புதிய OnePlus தயாரிப்புகள்!

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது 6.78-இன்ச் ஓரியண்டல் அமோஎல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட், ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப் (50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா), 16எம்பி செல்பீ கேமரா, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 12ஆர் இந்திய விலை: அமெரிக்காவில் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்பாடி தோராயமாக ரூ.35,000 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தோராயமாக ரூ.35,000 க்கும் விற்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14, 120ஹெர்ட்ஸ் 6.82-இன்ச் குவாட் எச்டி பிளஸ் எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், ஹசல்பிளாட் பிராண்டிங் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (50எம்பி + 64எம்பி + 48எம்பி) மற்றும் 32எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 12 இந்திய விலை: நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான இஷான் அகர்வாலின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.69,999 ஆக இருக்கும். முன்னதாக இது ரூ.65,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது ரூ.70,000 பட்ஜெட்டின்கீழ் வெளியாகும் என்பது போல் தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 OnePlus 12R OnePlus Buds 3 India Lauch Event Live Streaming Price Specifications Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X