வந்துட்டான்.. வந்துட்டான்! இனிமே எங்க பார்த்தாலும் OnePlus 12 தான்.. இதோட விலையும், அம்சங்களும் அப்படி!
ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன், ஒருவழியாக இன்று (டிச.5) அறிமுகமாகிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் சீன அறிமுகத்தை தொடர்ந்து, ஒன்பிளஸ் 12-ன் இந்திய அறிமுகம் ஜனவரி 23 அல்லது 24 ஆம் தேதியன்று நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில மணி நேரங்களில் ஒன்பிளஸ் 12 அறிமுகமாகி இருக்கும். அதற்கு முன்னதாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இது என்னனென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதனுடன் வேறு ஏதேனும் ஒன்பிளஸ் மாடல் அறிமுகமாகுமா? போன்ற விவரங்கள் இதோ:

ஒன்பிளஸ் 12 வெளியீட்டு நிகழ்வின் தேதி மற்றும் நேரம்: முன்னரே குறிப்பிட்டபடி, இந்திய நேரப்படி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு டிசம்பர் 5 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் மற்றும் இந்த அறிமுகம் சீன சந்தைக்கானதாக இருக்கும். இந்தியா உட்பட உலகளாவிய அறிமுகம் 2024 ஜனவரி மாதம் நடக்கலாம்.
ஒன்பிளஸ் 12 அம்சங்கள்: உறுதி செய்யப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 12-ன் ப்ராசஸர், டிஸ்பிளே, கேமரா செட்டப் மற்றும் பேட்டரியை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இது குவால்காமின் லேட்டஸ்ட் ப்ராசஸர் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படும். இது கேமிங்கிற்கான இன்-பில்ட் நியூ ஜெனரேஷன் எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டாரை உள்ளடக்கும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் 12-ல் 2கே ரெசல்யூஷன், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) டிஸ்பிளே பேக் செய்யப்படும். கேமராவை பொறுத்தவரை இது ஹாசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Hasselblad-branded Triple rear camera setup) பேக் செய்யும்.
அதில் சோனி எல்ஒய்டி-808 சென்சார் கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவு உடனான 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும். சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒன்பிளஸ் ஒப்பன் (OnePlus Open) மற்றும் ஒப்போ ஃபைண்ட் என்3 (Oppo Find N3) ஸ்மார்ட்போன்களில் உள்ள அதே அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ கேமராவைத்தான் இதுவும் பேக் செய்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஆனது 100W வயர்டு சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5400mAh பேட்டரியை கொண்டிருக்கும். மேலும் இது வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும். இதன் வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சொல்யூஷன் முறையே 26 நிமிடங்கள் மற்றும் 55 நிமிடங்களில் ஒன்பிளஸ் 12-ஐ பூஜ்யம் முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யும்.
ஒன்பிளஸ் 12 விலை: பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 11 5ஜி மாடலின் விலையுடன் ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11-ன் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.56,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக எப்படி பார்த்தாலும் ஒன்பிளஸ் 12-ன் விலை நிர்ணயம் ரூ.60,000 - ரூ.65,000 க்குள் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 12 உடன் வேறு ஏதேனும் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா? ஒன்பிளஸ் 12 அறிமுகத்திற்கு பின்னர் ஒன்பிளஸ் ஏஸ் 3 அல்லது ஒன்பிளஸ் 12ஆர்) அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் இது ஒன்பிளஸ் 12 உடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்டது.குறைந்தபட்சம் சில வார இடைவெளியாவது இருக்கும்.
டிசம்பர் 2023இல் வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? டிசம்பர் 6 ஆம் தேதியன்று ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் (4G and 5G Variants) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அதை தொடர்ந்து ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போன் டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








