பூமியின் மிகவும் சக்தி வாய்ந்த சிப்செட் உடன் OnePlus 12 வருகிறதா? அறிமுக தேதி உறுதியானதா?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடலான ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) இந்தியாவின் பெஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த போனின் அம்சங்கள் மிகவும் சிறப்பாக அமைந்ததனால், இதன் விற்பனை இந்தியாவில் சூடுபிடித்துள்ளது.
இதற்கு மத்தியில், ஒன்பிளஸ் பிராண்டின் அடுத்த புது வரவான ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) போன் பற்றிய தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன. அதன்படி, அடுத்து வரவிருக்கும் OnePlus 12 சாதனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், லீக் தகவல் ஏற்கனவே ஒன்பிளஸ் 12 இன் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை பற்றி தெரிவிக்க துவங்கியுள்ளது.

கடந்த வாரம் தான், OnePlus 12 ஸ்மார்ட்போன் ஐபோன்களில் இருக்கும் கேமராக்களை போன்ற ஒரு பெரிய கேமரா மேம்படுத்தலுடன் வரும் என்று கூறப்பட்டது. இப்போது மற்றொரு டிப்ஸ்டர் மூலம், இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய விவரக்குறிப்புகள் வெளிவரும் என்பதை லீக் செய்துள்ளார். ஒன்பிளஸ் 12 இன் டிஸ்ப்ளே, ப்ராசஸர், கேமராக்கள் மற்றும் பேட்டரி என்னவாக இருக்கும் என்பதை வெளிப்படுத்திய டிப்ஸ்டர் யோகேஷ் பிராரிடமிருந்து புதிய லீக் தகவல் வெளியாகியுள்ளது.
டிப்ஸ்டர் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுக்கான சாத்தியமான வெளியீட்டு காலவரிசையையும் சேர்த்து லீக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஆனால், இது அதன் சொந்த நாடான சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போன் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா உட்பட பிற சந்தைகளுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
OnePlus 12 போனில் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்ச விபரங்களை பற்றி பார்க்கையில், இந்த புதிய OnePlus 12 சாதனம் ஆனது, பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 6.7' இன்ச் QHD OLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராசஸர் பற்றி பேசுகையில், இது உலகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வெளிவரும்.

இந்த ஆண்டின் இறுதியில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது Qualcomm இன் முதன்மை மொபைல் சிப்செட் மற்றும் ஆற்றல் திறனில் 35% சதவீத முன்னேற்றத்தை வழங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 100W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது.
OnePlus 12 ஆனது 50MP பிரைமரி சென்சார், 50MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 64MP பெரிஸ்கோப் லென்ஸுடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதைப் பற்றி பேசுகையில், பெரிஸ்கோப் லென்ஸ், OnePlus 12-க்கு ஒரு பெரிய கேமரா மேம்படுத்தலாக இருக்கும், ஏனெனில் இது சிறந்த ஜூம் திறன்களை வழங்கக்கூடியது.
இது 10x ஆப்டிகல் ஜூம் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் வழங்கும் Samsung Galaxy S23 Ultra மற்றும் Google Pixel 7 Pro போன்ற பெரும்பாலான பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இது ஏற்கனவே உள்ளது. இந்த முறையும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிரீமியம் பிளாக்ஷிப் போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை அறிமுகம் செய்யவில்லை போல் தெரிகிறது. காரணம், இந்த முறையும் அதை பற்றிய பேச்சுக்கள் டெக் வட்டாரத்தில் அடிபடவே இல்லை.


Click it and Unblock the Notifications








