Home
News

எந்த புது போனும் வாங்கிடாதீங்க! OnePlus 12 இந்திய அறிமுக தேதி வெளியானது! விலை பற்றியும் புதிய தகவல்!

சரியான வெளியீட்டு தேதி (Launch Date) அறிவிக்கப்படும் முன்னரே ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீன சந்தையில் அறிமுகமாகும் அதனை தொடர்ந்து இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது.

பின்னர் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் சீன அறிமுகம் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு நகர்த்தப்பட்டது.

OnePlus 12 இந்திய அறிமுக தேதி வெளியானது!

இதற்கிடையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் எந்த தேதியில் நடக்கும் என்கிற விவரத்தை ஒன்பிளஸ் நிறுவனம் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போன் எந்த தேதியில் இந்திய சந்தையில் வெளியாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு (அதாவது 2023) பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை போலவே ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் கூட 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி வாக்கில் இந்திய சந்தைக்கு வரும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது முற்றிலும் தவறு. ஏனென்றால் இது சற்றே முன்பாக இந்தியாவிற்கு வரவுள்ளது!

OnePlus 12 இந்திய அறிமுக தேதி வெளியானது!

இந்தியா, யுகே, யுஎஸ் உள்ள நாடுகளுக்கான ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஒன்பிளஸ் 12 பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் ஒன்பிளஸ் 12-ன் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ஒன்பிளஸ் 12-ஐ இலவசமாக வெல்வதற்கான லாட்டரியை ஊக்குவிக்கிறது. அதன் வழியாக ஒன்பிளஸ் 12-ன் இந்திய அறிமுக தேதியை மிகவும் வெளிப்படையாக அறிந்துகொள்ள முடிகிறது.

ஒன்பிளஸ் அறிவித்துள்ள இந்த லாட்டரியில், உங்கள் இமெயில் ஐடி-ஐ பயன்படுத்தி ஒன்பிளஸ் 12 வெளியீட்டிற்காக நீங்கள் சப்ஸ்க்ரைப் செய்வதன் மூலம் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் ஒன்பிளஸ் 12-ஐ வெல்லலும் வாய்ப்பிற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள். (யுகே வலைத்தளத்தில்) இந்த போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், இந்த போட்டியானது நவம்பர் 27 முதல் ஜனவரி 23 வரை நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

OnePlus 12 இந்திய அறிமுக தேதி வெளியானது!

அதாவது ஒன்பிளஸ் 12 அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக (ஜனவரி 23) இந்த போட்டி முடிவடையும். ஆக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் க்ளோபல் லான்ச் ஆனது ஜனவரி 24 ஆம் தேதியன்று நடக்கலாம். ஒன்பிளஸ் நிறுவனம் இதை வேண்டுமென்றே செய்தது போல தெரியவில்லை, தற்செயலாக வெளியீட்டு தேதியை கசியவிட்டிருக்கிறது என்பது போலவே தெரிகிறது.

ஒன்பிளஸ் 12 டிசைன் மாற்றம் கலர் ஆப்ஷன்கள்: இது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பையே பின்பற்றுகிறது. பேக் பேனலின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ள பெரிய வட்ட வடிவிலான கேமரா யூனிட் ஆனது அதன் நடுப்பகுதியில் ஹசல்பிளாட் (Hasselblad) லோகோவுடன் வருகிறது.

OnePlus 12 இந்திய அறிமுக தேதி வெளியானது!

மேலும் இது கர்வ்டு எட்ஜஸ், மெலிதான பெஸல்கள் மற்றும் செல்பீ கேமராவை வைக்க டிஸ்பிளேவின் மேல் மையத்தில் ஹோல்-பஞ்ச் கட்அவுட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது பேல் க்ரீன், ராக் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளாது.

ஒன்பிளஸ் 12 அம்சங்கள்: இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, சோனி LYTIA LYT808 மெயின் கேமரா, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14, 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2கே ரெசல்யூஷன் உடனான ProXDR டிஸ்பிளே போன்றவைகளை கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் 12 விலை: முன்னதாக இது ரூ.80,000 பட்ஜெட்டில் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இது ஒன்பிளஸ் 11-ன் விலை வரம்புடன் ஒற்றுப்போகலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 ரூ.56,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் 12 மாடலும் கூட இதே விலை வரம்பில் கிடைக்கலாம்; அதிகபட்சம் இது ரூ.65,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பது புத்திசாலித்தனம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 India Launch Date January 24 Expected Specs Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X