அடுத்த அதிபயங்கரமான Android போன் இது தான்.. தாறுமாறான டாப் ஸ்கோர்.. எந்த மாடல் தெரியுமா?
புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் களமிறங்கவிருக்கிறது என்றால், அதன் தரத்தை சோதனை செய்து, அந்த சாதனத்திற்கான ஸ்கோரிங்கை ஒளிவு மறைவின்றி தெரியப்படுத்தும் ஒரு முக்கிய தளம் தான் அண்டுடு (AnTuTu). இந்த தளம் இப்போது 2 மில்லியன் ஸ்கோரிங்குடன் புதிய சாதனத்தை பட்டியலிட்டுள்ளது.
ஆம், 2 மில்லியன் ஸ்கோரிங்கை அசால்ட்டாக ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனம் தட்டிச் சென்றுள்ளது. இந்த ஸ்கோரிங் உடன் சிபியு (CPU), ஜிபியு (GPU), மெமரி ஸ்கோரிங் (memory score) மற்றும் யுஎக்ஸ் ஸ்கோரிங் (UX score) என்று எல்லா தரப்பிலும் டாப் மதிப்பெண்களை பெற்று ஒரு ஆண்ட்ராய்டு (Android) சாதனம் மற்ற எல்லா போன்களையும் பேக்கில் ஓட வைத்துள்ளது.

இது வேறு எந்த சாதனமும் இல்லை, ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திடம் இருந்து அடுத்து விரைவில் வெளியாகவிருக்கும் புதிய ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் சாதனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அண்டுடு வரலாற்றில் அதிக மதிப்பெண்ணை பெற்ற புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த ஒன்பிளஸ் 12 சாதனம் விளங்குகிறது.
இது உலக ஸ்மார்ட்போன் ஸ்கோரிங் பட்டியலில் இப்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால், சமீபத்தில் சியோமி (Xiaomi) நிறுவனம் அறிமுகம் செய்த, சியோமி 14 (Xiaomi 14) மாடல் பெற்ற அண்டுடு மதிப்பெண்களை விட அதிகமாக ஒன்பிளஸ் 12 சாதனம் பெற்று முதல் இதில் உள்ளது.
இதற்கு ஒரு முக்கிய காரணம், ஒன்பிளஸ் 12 சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய தலைமுறை குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm snapdragon 8 Gen 3 SoC) மாடலாகும். இதே சிப்செட் தான் சியோமியின் புதிய Xiaomi 14 தொடர் மற்றும் வரவிருக்கும் iQOO 12 மாடல் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இறுதியில் ஒன்பிளஸ் 12 மட்டுமே அதிக ஒட்டுமொத்த மதிப்பெண்ணை பெற்று முன்னிலையில் உள்ளது. இப்போது, ஒன்பிளஸ் 12 சாதனம் மாடல் எண் PJD110 உடன் AnTuTu தரப்படுத்தல் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக 21,10,808 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அண்டுடு வலைப்பக்க தகவல் காண்பிக்கிறது. இந்த எண்ணிக்கை குவால்காம் பகிர்ந்துள்ள Snapdragon 8 Gen 3 இன் அண்டுடு மதிப்பெண்ணுக்கு அருகில் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுக்கான தனித்தனி AnTuTu மதிப்பெண் விவரம் இதோ.. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) இன் சிபியு (CPU) ஸ்கோரிங் 4,95,780 ஆகும். அதேபோல், இந்த சாதனத்தின் ஜிபியு (GPU) ஸ்கோரிங் 9,14,151 ஆகும். இதன் மெமரி ஸ்கோரிங் விபரங்கள் பற்றி பேசுகையில், இது 3,62,402 மதிப்பெண்ணை ஸ்கோர் செய்துள்ளது. இறுதியாக, இதன் யுஎக்ஸ் (UX) மதிப்பெண் 3,38,475 என்று பதிவிடப்பட்டுள்ளது.
இறுதியாக, இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தின் ஓவரால் மதிப்பெண் 21,10,808 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் அண்டுடு பிளாட்ஃபார்மில் இதுவரை சோதனை செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களில் 99% ஐ விஞ்சிவிட்டதாக காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இவை Xiaomi 14 இன் AnTuTu ஸ்கோரை விட முன்னணியில் உள்ளது என்று அண்டுடு வலைப்பக்கம் தெளிவாக காண்பிக்கிறது. இதன் மூலம் அதிபயங்கரமான பெர்ஃபார்மென்ஸ் உடன் அடுத்து வெளிவர தயார்நிலையில் இருக்கும் சாதனமாக ஒன்பிளஸ் 12 திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








