Home
News

Apple-க்கு குத்து.. Honor கொஞ்சம் ஒத்து.. OnePlus 12 5G-யின் கேமரா செட்டப் அப்படி.. விலை தான் கொஞ்சம் அதிகம்!

உலகளாவிய சந்தைகளில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களை (Best Camera Smartphones) தன்வசம் கொண்டிருக்கும் பிரண்டுகளின் பட்டியலில் ஆப்பிள் (Apple) மற்றும் ஹானர் (Honor) நிறுவனங்களுக்கு எப்போதுமே ஒரு இடம் இருக்கும். அப்படியான இவ்விரு நிறுவனங்களுக்கு மத்தியில் ஒன்பிளஸ் (OnePlus) பிராண்ட் நுழைய விரும்புவது போல் தெரிகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான (Foldable Smartphone) ஒன்பிளஸ் ஓப்பன்-ஐ கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இது பிராண்டின் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின்கீழ் ஒன்பிளஸ் நிறுவனம் இதில் சோனி எல்ஒய்டி-டி808 மெயின் கேமரா சென்சாரை (Sony LYT-T808 Main Camera Sensor) சேர்த்தது.

Apple-க்கு குத்து.. OnePlus 12 5G-யின் கேமரா செட்டப் அப்படி!

இதற்கிடையில், இதே மெயின் சென்சார் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) ஸ்மார்ட்போனிலும் இடம்பெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1,39,999 க்கு வாங்க கிடைக்கும் மோஸ்ட் பிரீமியம் ஸ்மார்ட்போனான (Most Premium Smartphone) ஒன்பிளஸ் ஓப்பனில் இருக்கும் அதே கேமரா, ஒன்பிளஸின் அடுத்த பிளாக்ஷிப் போனில் (Flagship Phone) இடம்பெறவுள்ளது.

இது தவிர, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 1/2-இன்ச் 64 மெகாபிக்சல் ஓவி64பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸும் (1/2-inch 64MP OV64B Periscope telephoto lens) இடம்பெறும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த சென்சார் 70மிமீ, 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (3x Optical Zoom), எஃப்/2.6 அபெர்ச்சர் ஆகியவற்றை ஆதரிக்கும்.

Apple-க்கு குத்து.. OnePlus 12 5G-யின் கேமரா செட்டப் அப்படி!

மேலும் ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization) மற்றும் ஹசல்பிளாட் அல்காரிதம் (Hasselblad Algorithm) ஆகியவற்ற்கான ஆதரவு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் ஓப்பன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட 48எம்பி 1/1.43-இன்ச் LYT-T808 சென்சாருடன் ஒப்பிடும்போது, ​ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி 1/1.4-இன்ச் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Apple-க்கு குத்து.. OnePlus 12 5G-யின் கேமரா செட்டப் அப்படி!

ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனானது பிராண்டுகளுக்கு இடையே மோதிக்கொள்ளும் அளவிலான கேமரா செட்டப்பை பேக் செய்யும். ஏனென்றால், இவ்விரு சென்சார்களுமே மொபைல் போன் ஃபிளாக்ஷிப் சென்சார்கள் துறையில் "தலைசிறந்த படைப்புகள்" ஆகும் மற்றும் உலகின் முன்னணி மொபைல் இமேஜ் சென்சார்களும் (World's leading mobile image sensors) கூட!

இது தவிர, ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே தொடர்பான சில விவரங்களும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிஒஇ-ல் இருந்து 2கே "எக்ஸ்1 ஓரியண்டல் டிஸ்பிளேவை (BOE 2K "X1 Oriental Display) பேக் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவானது 2600 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் (Up to 2600 nits brightness) ஆதரிக்கும் மற்றும் ஒப்போவின் ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் செல்ஃப்-டெவெலப்டு இமேஜ் குவால்டிய் எஞ்சின் டிஸ்பிளே பி1 சிப்பையும் (Oppo's first-generation self-developed image quality engine Display P1 chip) கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் 12 5ஜி-யின் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ப்ராசசர் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயக்கப்படும். இந்த சிப்செட் 24ஜிபி ரேம் (24GB RAM) மற்றும் 1டிபி வரையிலான ஸ்டோரேஜ் (1TB Stroage) உடன் இணைக்கப்படலாம்.

கடைசியாக இது 100வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (100W Wired Fast Charging) மற்றும் 50வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை (50W Wireless Fast Charging) ஆதரிக்கும் 5400எம்ஏஎச் பேட்டரி யூனிட்டை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற தகவளின்படி ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது வருகிற 2024 ஜனவரியில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் இதன் விலை நிர்ணயம் ரூ.80,000க்கு அருகில் இருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 Camera Sony LYT 808 Sensor 64MP Periscope Lens Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X