வச்சான் பாரு OnePlus.. மொத்த பட்ஜெட் போன்களும் காலி.. OnePlus 12R | 1TB மெமரி.. விலை என்ன தெரியமா?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனம் மற்றும் பட்ஜெட் மாடலான (Budget smartphone) ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) சாதனத்தை இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சொந்த சந்தையான சீனாவில் ஏற்கனவே ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்டது. ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) என்ற ஸ்மார்ட்போன் சாதனம் தான் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) என்று அறிமுகமாகவிருக்கிறது.

ஜனவரி 23, 2024 இல் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்ற தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது. இதனால், ஒன்பிளஸ் ரசிகர்கள் அதிக எதிர்பார்புடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சாதனங்களின் அறிமுக நிகழ்விற்காக காத்திருக்கின்றனர். இப்போது, அறிமுகத்திற்கு முன்பாகவே இந்த சாதனத்தின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) or ஒன்பிளஸ் 12R (OnePlus 12R):
ஒன்பிளஸ் 12 சாதனத்தை பற்றி நாம் இதற்கு முன்பு அதிக விபரங்களை பார்த்துவிட்டதினால், ஒன்பிளஸ் 12R பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த சாதனம் ஐயன் க்ரேய் (Iron Grey) மற்றும் கூல் ப்ளூ (Cool Blue) நிறங்களில் வெளிவரும். 6.78" இன்ச் ProXDR LTPO 4.0 OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் உடன் 1Hz முதல் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) அம்சத்தை ஆதரிக்கிறது.
இந்த டிஸ்பிளேவின் பாதுகாப்பிற்காக இது கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்புடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் சாதனம் இந்திய சந்தையில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பேட்டரி அம்சம் பற்றி பேசுகையில், இது 5500mAh பேட்டரி உடன் 100W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் அம்சத்தை பேக் செய்யும்.

ஒன்பிளஸ் 12R சிறப்பம்சம் (OnePlus 12R Specifications):
ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) சாதனம் 16MP முன்பக்க கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50MP (Sony IMX890, OIS) + 8MP (ultra-wide) + 2MP (macro) ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் (ColorOS 14) உடன் சீனா சந்தையில் அறிமுகமாகிறது.
இந்திய மற்றும் உலக சந்தையில் ஒன்பிளஸ் 12R சாதனம் ஆண்ட்ராய்டு 14 உடன் ஆக்சிஜன் 14 (OxygenOS 14) இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை பற்றிய கணிப்பும் நம்மிடம் உள்ளது. காரணம், ஒன்பிளஸ் ஏஸ் 3 சாதனம் சீனாவில் 3 வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்திய விலையை நாம் எளிதாக கணிக்க முடியும்.
ஒன்பிளஸ் 12R இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக வெளிவரும். இதன் விலை ரூ. 30,000 இலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உயர்நிலை வேரியண்ட் மாடலின் விலை ரூ.40,000 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








