Home
News

நாள் குறிச்சாச்சு.. OnePlus 12R இந்திய அறிமுகம்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்? எப்போது சேல்ஸ் ஆரம்பம்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) சாதனத்தை உலக சந்தையிலும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யவுள்ளது. இத்துடன் சேர்த்து நிறுவனம் பட்ஜெட் மாடலான ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) மாடலை அறிமுகம் செய்கிறது.

ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுக தேதி பற்றிய தகவலை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த தருணம் இப்போது நடக்கவுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R போன்களின் இந்த உலக அறிமுக வரும் ஜனவரி 23 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டில் நடைபெறும்.

நாள் குறிச்சாச்சு.. OnePlus 12R இந்திய அறிமுகம்.. என்ன விலை?

இந்த அறிமுக நிகழ்வு ஒரே நேரத்தில் 3 நாடுகளில் நடத்தப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக வட அமெரிக்கா (North America), ஐரோப்பா (Europe), மற்றும் இந்தியா (India) போன்ற நாடுகளில் ஒரே நாளில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R சாதனத்தை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வை ஒன்பிளஸ் ஆன்லைன் மூலம் விர்ச்சுவல் அறிமுக நிகழ்வாக நிகழ்த்தவுள்ளது. வட அமெரிக்க பகுதியில், இந்த வெளியீட்டு நிகழ்வு காலை 9:00 EST மணி நேரப்படி நடக்கும். அதேபோல், ஐரோப்பாவில், இந்த நிகழ்வு 3:00 PM CET மணி நேரப்படி நடைபெறும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இந்த நிகழ்வு மாலை 7:30 மணிக்கு இந்தியாவில் நடைபெறும். இந்த அறிமுக நிகழ்வின் வழியாக ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) அறிமுகம் செய்யப்படும். இந்த இரண்டு போன்களுக்கும் இடையிலான சிறிய வேறுபாடுகள் பற்றி நிறுவனம் கூறியுள்ளது. ஒன்பிளஸ் 12 வழக்கம் போல நிறுவனத்தின் ஹை-எண்டு பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக வருகிறது.

அதேபோல், பட்ஜெட் பிரியர்களை கவரும் வகையில் ஒன்பிளஸ் 12R (OnePlus 12R) அறிமுகமாகிறது என்று கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 12 சாதனத்தை சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. இதனால், இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்பது நமக்கு இப்போது தெளிவாக தெரியும்.

இந்த புதிய ஒன்பிளஸ் 12 சாதனம் 6.82" இன்ச் வளைந்த OLED QHD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் அம்சத்துடன் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி, 16ஜிபி LPDDR5x ரேம் உடன் 1TB வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இந்த போனில் பிரத்தியேகமான விசி கூலிங் சிஸ்டம் (VC cooling system) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் மற்றும் மெட்டல் பாடியுடன் பிரீமியம் டிசைனில் வருகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், நிறுவனம் அறிமுகம் செய்த முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) சாதனத்தில் வழங்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா அம்சங்களை பெறுகிறது. இதில் 50MP மெயின் கேமரா இடம்பெறும்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் 5,400mAh பேட்டரி அம்சத்தை ஆதரிக்கிறது. ஒன்பிளஸ் 12R அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலும் ஒன்பிளஸ் 12 இல் உள்ள அம்சங்களை கவர் செய்கிறது. ஆனால், இதன் சிப்செட் மட்டும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆக இருக்க வாய்ப்புள்ளது.

ஸ்டோரேஜ் வேகம் மற்றும் செல்பி கேமராவில் சிறிய மாற்றங்களை பெறலாம் என்று கூறப்படுகிறது. இதன் விற்பனை அறிமுகத்தை ஒட்டி அதே நாளில் நடைபெறும். இதன் விலை பற்றி பேசுகையில் ஒன்பிளஸ் 12R ரூ.35,000 முதல் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 12 and OnePlus 12R Indian Launch Time and Date With Price and Specification Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X