எல்லா போனையும் பேக்கில் ஓடவிடும் அம்சத்துடன் OnePlus 11 ரெடி.! என்ன மேட்டர் தெரியுமா?

|

OnePlus ரசிகர்களுக்கு இந்த ஆண்டிற்கான புது வரவு ஸ்மார்ட்போன்களின் அறிமுகமெல்லாம் முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறான முடிவு. காரணம், நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, நிறுவனம் சமீபத்தில் தான் OnePlus 10T சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் OnePlus 11 அறிமுகமா?

அடுத்த பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் OnePlus 11 அறிமுகமா?

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட OnePlus 10T ஸ்மார்ட்போன் தான், இந்த ஆண்டின் கடைசி பிரீமியம் மாடலாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால், நிறுவனம் எங்களுடைய கணிப்பை மாற்றியுள்ளது. ஆம், OnePlus நிறுவனம் அதன் அடுத்த பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ​​​​OnePlus 11 வரிசையில் மும்முரமாக பணிபுரிந்து வருவதாக நிறுவனத்தின் அறிக்கைகள் இப்போது வெளிவரத் துவங்கியுள்ளன.

எப்போது ஒன்பிளஸ் 11 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்?

எப்போது ஒன்பிளஸ் 11 சீரிஸ் மாடல்கள் அறிமுகம்?

சீன டிப்ஸ்டர் வெளியிட்ட தகவலின் படி, ஒன்பிளஸ் 11 சீரிஸ் மாடல்கள் இந்த ஆண்டின் இறுதியில், அதாவது டிசம்பர் மாதம் 2022 இல் அறிமுகப்படுத்தப்படும் என்பதைக் குறிப்பிடுகிறது. இந்த புதிய OnePlus 11 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

OnePlus 11 சீரிஸ் வரிசையில் எத்தனை மாடல்களை எதிர்பார்க்கலாம்?

OnePlus 11 சீரிஸ் வரிசையில் எத்தனை மாடல்களை எதிர்பார்க்கலாம்?

OnePlus 11 சீரிஸ் வரிசையில் OnePlus 11 மற்றும் OnePlus 11 Pro போன்ற இரண்டு போன்களை நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவை தளமாகக் கொண்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியிட்ட ஒரு தகவலில், ஒன்பிளஸ் 11 புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட் உடன் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது Qualcomm 8+ Gen 1 சிப்செட்டை விட உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குஷியில் OnePlus ரசிகர்கள்

குஷியில் OnePlus ரசிகர்கள்

இது தவிர இந்த புதிய OnePlus 11 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்கள் மற்றும் கேமரா விபரங்கள் போன்ற பிற அம்சங்களின் தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த புதிய OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி, OnePlus ரசிகர்களைக் குஷி அடையச் செய்துள்ளது.

உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?உங்க அமெரிக்க நண்பரிடம் கூறி கம்மி விலையில் iPhone 14 வாங்க வேண்டாம்.! ஏன் தெரியுமா?

OnePlus 10T மாடலின் தற்போதைய விலை என்ன?

OnePlus 10T மாடலின் தற்போதைய விலை என்ன?

OnePlus இன் சமீபத்திய அறிமுகமான OnePlus 10T Pro ஆனது Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் இப்போது விற்பனையில் வாங்கக் கிடைக்கிறது. OnePlus 10T இப்போது மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வாங்கக் கிடைக்கிறது. OnePlus 10T ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 49,999 ஆக இருக்கிறது. அதேபோல், இந்த சாதனத்தின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 54,999 ஆகும்.

எங்கிருந்து புதிய OnePlus ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்?

எங்கிருந்து புதிய OnePlus ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்?

அதேபோல், இந்த டிவைஸின் ஹை- வேரியண்ட் மாடலான 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 55,999 ஆக இருக்கிறது. இந்த OnePlus ஸ்மார்ட்போன்கள் மூன்ஸ்டோன் பிளாக் மற்றும் ஜேட் கிரீன் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்கள் வாங்கக் கிடைக்கிறது. இந்த மாடல்கள் இப்போது அமேசான் தளம் வழியாகவும், OnePlus நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவும் வாங்கக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 11 Series Premium Smartphones with Snapdragon 8 Gen 2 SoC Expected To Launch in December 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X