OnePlus 11 Pro 5G அறிமுகத்திற்கு ரெடி.! அடேங்கப்பா எல்லாமே டாப் கிளாஸ் ஸ்பெக்ஸ் போலயே.!

|

OnePlus நிறுவனத்தின் அடுத்த புது வரவான OnePlus 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் இப்போதே இணையத்தில் வெளிவரத் துவங்கிவிட்டன. சமீபத்தில் வெளியான ஒரு லீக் தகவலில் புதிதாக வரவிருக்கும் OnePlus 11 Pro 5G ஸ்மார்ட்போன் குறித்த ஸ்பெக் விபரங்கள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், ஒன்பிளஸ் இன் இந்த புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. OnePlus 11 Pro 5G பற்றிய முழு விபரம் இதோ.

OnePlus 11 Pro 5G பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு ரெடியா?

OnePlus 11 Pro 5G பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு ரெடியா?

OnePlus இன் இந்த வரவிருக்கும் OnePlus 11 Pro 5G பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒன்பிளஸின் தற்போதைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக திகழும் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5G மாடலை நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் உலகளாவிய அறிமுகத்தை OnePlus நடத்தியது.

எப்போது இந்த OnePlus 11 Pro 5G அறிமுகமாகும்?

எப்போது இந்த OnePlus 11 Pro 5G அறிமுகமாகும்?

இதேபோல், வரும் ஜனவரி அல்லது 2023 ஆம் ஆண்டின் Q1 இல் நிறுவனம் இந்த புதிய OnePlus 11 Pro 5G பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சமீபத்தில் வெளியான ஒரு டிப்ஸ்டர் தகவலின் படி, வரவிருக்கும் புதிய OnePlus 11 Pro 5G போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்த டிவைஸின் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் தெளிவாக ரெண்டெர் புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது.

OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!

பிரீமியம் ஹை-கிளாஸ் அம்சத்துடன் வெளிவருகிறதா OnePlus 11 Pro?

பிரீமியம் ஹை-கிளாஸ் அம்சத்துடன் வெளிவருகிறதா OnePlus 11 Pro?

OnePlus 11 Pro 5G சாதனம் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக, பிரீமியம் ஹை-கிளாஸ் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படும். இதன் கேமரா, சிப்செட், டிஸ்ப்ளே போன்ற மற்ற சிறப்பம்ச விபரங்களை டிப்ஸ்டர் தகவல் வெளிப்படுத்துகிறது. இந்த தகவலின் படி, OnePlus 11 Pro 5G பின்புறத்தில் புதிய கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், டிஸ்பிளேவின் மேல் ஓரத்தில் செல்பி கேமரா கொண்ட பன்ச் ஹோல் கட்அவுட் வழங்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

OnePlus 11 Pro 5G ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

OnePlus 11 Pro 5G ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

OnePlus 11 Pro 5G டிவைஸின் சிறப்பம்ச விபரங்கள் அதன் ரெண்டர் டிசைன் படங்கள் லீக் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, OnePlus 11 Pro 5G மேம்படுத்தப்பட்ட விவரக்குறிப்புகளுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது, 6.7' இன்ச் அளவு கொண்ட QHD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் மிரட்டலான கேமரா

சக்தி வாய்ந்த Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் மிரட்டலான கேமரா

இந்த புதிய OnePlus 11 Pro 5G ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்த Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது 16 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். OnePlus 11 Pro 5G டிவைஸில் புதிய சர்க்கிள் வடிவ கேமரா அமைப்பு உள்ளதை ரெண்டர் தகவல் காண்பிக்கிறது. இந்த போனில் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 32MP டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும் என்று OnLeaks கூறுகிறது.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

மற்ற போனில் மிஸ் ஆன இந்த அம்சம் OnePlus 11 Pro 5G இல் மீண்டும் வருகிறதா?

மற்ற போனில் மிஸ் ஆன இந்த அம்சம் OnePlus 11 Pro 5G இல் மீண்டும் வருகிறதா?

இந்த ஸ்மார்ட்போனின் சென்சார்கள் பற்றிய விவரங்கள் தற்போது தெரியவில்லை. ஆனால், ஹாசல்பிளாட் நிறுவனத்துடன் இணைந்து இதன் கேமரா உயர் தரத்தில் டியூன் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16MP கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல OnePlus போன்களில் காணாமல் போன அலெர்ட் ஸ்லைடர் இந்த புதிய OnePlus 11 Pro 5G போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறதா?

வயர்டு பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறதா?

இந்த டிவைஸ் 5000mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும், இதில் மேம்படுத்தப்பட்ட 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் இடம்பெறுமா இல்லையா என்பது குறித்த எந்த தகவலையும் லீக் தகவல் குறிப்பிடவில்லை. இது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 13 இல் இயங்கும். இது தவிர இதில், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், டால்பி அட்மோஸுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Wi-Fi 6E, ப்ளூடூத் 5.2, GPS மற்றும் USB டைப்-சி போன்றவை இடம்பெறும்.

Best Mobiles in India

English summary
OnePlus 11 Pro Flagship Smartphone Said To Launch Early Next Year With Snapdragon 8 Gen 2 SoC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X