Nothing போனை தூக்கி சாப்பிட்ட புது OnePlus 11 Concept போன்.! பேக்லைட் சும்மா அள்ளுது.!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) மற்றும் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) ஆகிய சாதனங்களை அறிமுகம் செய்தது. இந்த போன்களை அறிமுகம் செய்த வேளையில், நிறுவனம் OnePlus 11 Concept போன் மாடலையும் விரைவில் வெளியிட இருப்பதாக அறிவித்தது.
இதன் படி, இப்போது நிறுவனம் அடுத்து அதன் பட்டியலில் இருந்து வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான, ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் மாடலின் சில புகைப்படங்களை வெளியிட்டு அதன் ரசிகர்களை டீஸ் செய்துள்ளது. பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2023 நிகழ்வின் போது OnePlus 11 கான்செப்ட் என அழைக்கப்படும் இந்த புதிய கான்செப்ட் ஸ்மார்ட்போனைக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதை OnePlus ஏற்கனவே நிகழ்ந்த OnePlus 11 Cloud நிகழ்வில் உறுதிப்படுத்தியுள்ளது. OnePlus 11 கான்செப்ட் போனின் அதிகாரப்பூர்வ ஷோகேஸ் அறிமுகத்திற்கு முன்னதாக, சிறிய டீஸர் வீடியோ மூலம் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளது. டீஸ் செய்யப்பட்ட வீடியோவில், ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனின் பின்புற பேனலின் பர்ஸ்ட் லுக் நமக்கு கிடைத்துள்ளது. இது பின்புறத்தில் ப்ளூ நிற லைட்டிங் உடன் ஃபிளோவ் (flow), அதாவது பாயும் பின்புற டிசைனை கொண்டுள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள டீச்சரின் தகவலை வைத்து பார்க்கையில், OnePlus 11 கான்செப்ட்டின் பின்புறம் இப்படித்தான் இருக்கும் என்பது இப்போது நமக்கு தெரியவந்துள்ளது. மனித உடலில் உள்ள இரத்த நாளங்களைப் போலவே, சாதனத்தின் பின்புறம் வழியாக செல்லும் ஐஸ் ப்ளூ நிற பைப்லைன்களை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. நத்திங் போனில் இருக்கும் பேக்லைட் டிசைன் போல, இதுவும் காட்சியளிக்கிறது.

இந்த ப்ளூ லைட் பைப்லைன்கள் யூனிபாடி கிளாஸ் டிசைன் கீழ் உட்பொதிக்கப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு நத்திங் ஃபோனின் (1) கிளைஃப் இடைமுகத்திலிருந்து உத்வேகம் பெற்றதாகத் தோன்றலாம், ஆனால் OnePlus 11 கான்செப்டில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வெள்ளை லைட்-க்கு பதிலாக ப்ளூ நிறத்தை தேர்வு செய்துள்ளது.
தற்போதைக்கு, OnePlus 11 கான்செப்ட் ஆனது நிலையான OnePlus 11 உடன் ஒப்பிடும் போது மாற்றப்பட்ட பின்புற பேனலை மட்டுமே கொண்டிருக்கும் என்பது தெளிவாகியுள்ளது. இந்த போனின் முன்பக்கத்தில் மாற்றங்கள் இருக்குமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். OnePlus 11 கான்செப்ட் போன் வரும் பிப்ரவரி 27, 2023 அன்று இரவு 9 CET மணிக்கு (பிப்ரவரி 28, 1:30 AM IST) அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, OnePlus 11 Concept போன் பற்றி அறிந்துகொள்ள, நாம் இன்னும் அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை. எப்படியிருந்தாலும், OnePlus 11 கான்செப்ட் வணிக ரீதியாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. இந்த போனின் மாடலை அடிப்படையாக வைத்து, OnePlus வேறேதேனும் திட்டத்தை மேற்கொள்ளலாம் அல்லது OPPO அதன் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை வணிக ரீதியாகக் கிடைக்கச் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








