Just In
- 14 min ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- 30 min ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
Don't Miss
- News
"இந்து சாமி சிலைகள் குறி.." ஒரே இரவில் 12 இந்து கோயில்கள் மீது தாக்குதல்.. உச்சக்கட்ட பரபரப்பு.!
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Finance
விடாமல் துரத்தும் Layoff.. Pinterest, ஆட்டோடெஸ்க் அறிவிப்பு.. பீதியில் டெக் ஊழியர்கள்..!
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Movies
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெயிட் பண்ணுன காலம் முடிந்துவிட்டது: OnePlus 11 நாளை அறிமுகம்.! லைவ் பார்ப்பது எப்படி?
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வரிசையை புதிய பிளாக்ஷிப் சாதனத்துடன் விரிவுபடுத்த உள்ளது. இது நிறுவனத்தின் உள்நாட்டு சந்தையில் நாளை (ஜனவரி 4, 2023) வெளியிடப்படும். அதாவது சீனாவில் நிறுவனம் அதன் வரவிருக்கும் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான OnePlus 11 சாதனத்திற்கான வெளியீட்டு நிகழ்வை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது.

OnePlus 11 ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.! வெயிட்டிங் ஓவர்.!
இது சீனாவில் ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்படும். OnePlus 11 ஸ்மார்ட்போன் (smartphone) வரும் பிப்ரவரி 7ம் தேதியில் இந்தியா (OnePlus 11 India Launch Event) உட்பட உலகளாவிய பிற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் நாளை சீனாவில் (OnePlus 11 China Launch Event) அறிமுகம் செய்வதினால், உலக ஒன்பிளஸ் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் ரசிகர்களும் இந்த போனின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

உலக ஆண்ட்ராய்டு வரலாற்றிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்.!
காரணம், இந்த டிவைஸ் தான் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (android smartphone) வரலாற்றிலேயே அதிக AnTuTu மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தேதி வரை உலகத்தில் இப்படி ஒரு அதிக மதிப்பெண்களை எந்தவொரு ஆண்ட்ராய்டு சாதனமும் இதற்கு முன் பதிவு செத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி, நாளை அறிமுகம் செய்யப்படவிருக்கும் இந்த OnePlus 11 டிவைஸின் அறிமுகம் நிகழ்வை எப்படி லைவ் பார்ப்பது? (How to watch OnePlus 11 Event Live) இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

OnePlus 11 வெளியீட்டை எவ்வாறு லைவ் பார்ப்பது?
OnePlus 11 வெளியீட்டை எவ்வாறு பார்ப்பது? சீனாவில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும். ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சீன இணையதளத்தில் முழு நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்பும். இந்த OnePlus 11 இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் வெளியீட்டு நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.

OnePlus 11 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
OnePlus 11 சமீபத்தில் TENAA உட்பட பல சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்டது. வரவிருக்கும் OnePlus 11 ஸ்மார்ட்போனில் Quad HD+ டிஸ்பிளே தெளிவுத்திறன் (3216 x 1440 பிக்சல்கள்), 120Hz ரெப்ரெஷ் ரேட் விகிதம், 10-பிட் வண்ணங்கள் மற்றும் டிஸ்பிளேவின் அடியில் இன்பில்ட் கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றை வழங்கக்கூடிய 6.7' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் இடம்பெறும் என்று TENAA பட்டியல் வெளிப்படுத்துகிறது.

உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சிப்செட்.!
இந்த சாதனமானது உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm இன் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 Gen 2 சிப்செட் உடன் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் ஆதரிக்கப்படலாம். இந்த டிவைஸ் IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ்கள் தவிர, சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்படலாம்.

OnePlus 11 போனின் கேமரா அம்சம்
கேமரா பற்றி பேசுகையில், இந்த புதிய OnePlus 11 ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் 50MP பிரைமரி கேமரா சென்சார், 48MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32MP டெலிஃபோட்டோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக 16MP முன்பக்க ஷூட்டரும் இடம்பெறும்.

தரமான பேட்டரி மற்றும் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்.!
இந்த ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் ColourOS 13 தனிப்பயன் ஸ்கின் உடன் இயக்கும். இதற்கிடையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஒன்பிளஸ் 11 சாதகமானது தனிப்பயன் OxygenOS இடைமுகத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது கவனிக்கத்தக்கது. வரவிருக்கும் ஒன்பிளஸ் 11 டிவைஸ் 5000mah பேட்டரி யூனிட்டை பேக் செய்கிறது. இது 100வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470