OnePlus 11 பாக்ஸிற்குள் என்ன-என்ன இருக்கு தெரியுமா? போட்டோ போட்டு காட்டிய டிப்ஸ்டர்.!

|

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதனுடைய அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) சாதனத்தை வரும் ஜனவரி 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

உலக அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் (smartphone) அறிமுகத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் - இந்த ஸ்மார்ட்போன் உடன் அதன் பாக்சில் என்னென்ன ஆக்சஸரீஸ் (OnePlus 11 Box Accessories) சாதனங்களை நிறுவனம் வழங்குகிறது என்ற புது தகவல் வெளியாகியுள்ளது.

OnePlus 11 பாக்ஸிற்குள் என்ன-என்ன இருக்கு தெரியுமா? போட்டோவே லீக்-ஆ.!

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சாதனத்துடன் அதன் பாக்சில் என்னென்ன ஆக்சஸரீஸ் சாதனங்களை நிறுவனம் வழங்குகிறது என்ற விபரத்தை ஒரு புதிய டிப்ஸ்டர் தகவல் அப்பட்டமாக ஒளிவு மறைவு இன்றி தெளிவாக ஆன்லைனில் புகைப்படத்துடன் லீக் (OnePlus 11 Leak) செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்னால், இந்த ஒன்பிளஸ் 11 சாதனத்தின் ரெண்டர் புகைப்படங்கள் மற்றும் முழு விபர சிறப்பம்ச தகவல்கள் (OnePlus 11 Full Specifications) இணையத்தில் லீக் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இப்பொழுது ட்விட்டரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்துடன் அதன் பெட்டியில் (OnePlus 11 Box) என்னென்ன கிடைக்கும் என்பதை தெளிவாகக் காண்பிக்கும் புகைப்படத்துடன் புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நமக்குத் தெரிந்த தகவலின் படி வரவிருக்கும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பொருத்தப்பட்டு இருக்கும் என்று டிப்ஸ்டர் ஸ்டோரி இவான் பிளஸ் தெரிவித்துள்ளார்.

மிக சமீபத்தில் வெளியான தகவலின் படி ஆண்ட்ராய்டு (Android) வரலாற்றிலேயே இந்த OnePlus 11 சாதனம் தான் அதிகப்படியான AnTuTu மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு ஹை-ஸ்கோரை (High score) எட்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த OnePlus 11 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கான ஹைப் உலகளவில் அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

OnePlus 11 பாக்ஸிற்குள் என்ன-என்ன இருக்கு தெரியுமா? போட்டோவே லீக்-ஆ.!

இதற்கு முன் வெளியான தகவலின் படி இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்றும், அது Hasselblad அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், இந்த ஒன்பிளஸ் ஃப்லாக்ஷிப் ஸ்மார்ட்போன் 2K தெளிவு திறன் கொண்ட; 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் கடந்த வாரங்களில் பார்த்த லீக்ஸ் ஆகும்.

சரி இப்போது இந்த ஸ்மார்ட் போன் பாக்ஸுடன் என்னென்ன அக்சஸரீஸ் கிட்களை நிறுவனம் வழங்குகிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.. இந்த OnePlus 11 சாதனம் ஒரு சார்ஜர் பிரிக் (charger brick) மற்றும் சார்ஜர் கேபிள் (charger cable) உடன் வருகிறது. இது மட்டும் இன்றி ஒன்பிளஸ் 11 டிவைஸ் கருப்பு நிற சிலிக்கான் மொபைல் கேஸ் (mobile case) உடன் வருகிறது. இத்துடன் இந்த பாக்ஸ் இல் சிம் எஜக்டர் பின் (SIM ejector pin) மற்றும் சில OnePlus நிறுவனத்தின் சில பிரத்தியேகமான ஸ்டிக்கர்கள் (OnePlus stickers) உடன் கேட்டலாகையும் இந்த பாக்ஸ் கொண்டுள்ளது என்பதைப் புகைப்பட விபரம் காண்பிக்கிறது.

OnePlus 11 சிறப்பம்சம்

  • 6.7' இன்ச் E4 AMOLED டிஸ்பிளே
  • 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 2K (3216 x 1440 பிக்சல்)
  • கார்னர் பஞ்ச்-ஹோல் நாட்ச்
  • அட்ரீனோ 740 GPU
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
  • 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜ்
  • 12GB + 256GB ; 16GB + 256GB மற்றும் 16GB + 512GB வேரியண்ட்
  • ட்ரிபிள் கேமரா அமைப்பு
  • 50MP + 32MP + 48MP பின்புற கேமரா சென்சார்கள்
  • 16MP முன்பக்க கேமரா சென்சார்
  • ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ColorOS 13.0 OS
  • 100W பாஸ்ட் சார்ஜிங்
  • வயர்லெஸ் சார்ஜிங்
  • 5000mAh பேட்டரி

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 11 Box Accessories Contents and Specs Sheet Got Leaked Before January 4th Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X