Home
News

இப்படிவொரு போன பாத்த வாங்கிடுவீங்க.. சொப்பன சுந்தரி OnePlus 11 எடிஷன்!

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், அனைத்து பிராண்ட் ஸ்மார்ட்போன் பிரியர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்த ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி எடிஷன் (OnePlus 11 5G Marble Odyssey Edition) போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ், கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பிளஸ் 11 5ஜி போனை வெளியிட்டது. இந்த போனின் அட்டகாசமான கேமரா, டிஸ்பிளே ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல ஒன்பிளஸ் 11 5ஜி போனின் விற்பனையும் சக்கை போடு போட்டது. இதனால், ஒன்பிளஸ் பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 5ஜி எடிஷனை வெளியிட உள்ளதாக அறிவித்தது.

இப்படிவொரு போன பாத்த வாங்கிடுவீங்க.. சொப்பன சுந்தரி OnePlus 11 எடிஷன்!

இந்த புதிய எடிஷன் ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி என்றழைக்கபடும் என்றும் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் கடந்த வாரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுவிட்டது. வரும் ஜூன் 6ஆம் தேதி ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3டி மைக்ரோ கிரிஸ்டலின் பேக் பேனலுடன் மார்பிள் ஃபினிஷிங்கில் வெளியாக உள்ளது.

இதுவொரு லிமிடெட் எடிஷன் என்பதால், முதலில் ஆர்டர் போட ஸ்மார்ட்போன் பிரியர்கள் காத்தித்துக் கொண்டிருகின்றனர். இந்த ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி எடிஷன் 16 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உடன் வர வாய்ப்புள்ளது. இதனால் விலையும் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் 11 5ஜி போனின் முழு அம்சங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்பிளஸ் 11 5ஜி அம்சங்கள்: 6.7 இன்ச் குவாட்-எச்டி-பிளஸ் (Quad-HD+) அமோலெட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதோடு 1440 x 3216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 உடன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது.

அதோடு ஆக்சிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) கொடுக்கப்பட்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதன்படி 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 32 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா சோனி ஐஎம்எக்ஸ்471 (Sony IMX471) சென்சாருடன் வருகிறது.16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரோஜ் வசதி உள்ளது. 5,000mAh பேட்டரி 100W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.64,999 இப்போது வருவிருக்கும் ஒன்பிளஸ் 11 5ஜி மார்பில் ஓடிஸி எடிஷன் ரூ. 3,000 அதிகமாக விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 11 5G Marble Odyssey edition launch to India on June 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X