ரெட் கார்ப்பெட் போடுங்கப்பா.. வெயிட்டிங்கில் வெறியேற்றும் OnePlus எடிஷன்.. எந்த மாடல்?
இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் தூண்டிவிட்டுருக்கும் ஒன்பிளஸ் 11 5ஜி ஜென்ஷின் இம்பாக்ட் லிமிடெட் எடிஷன் (OnePlus 11 Genshin Impact Limited Edition) போன் எப்போது வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.
சீனாவில் பிப்ரவரி மாதம் ஒன்பிளஸ் 11 5ஜி போன் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரும் வரவேற்பை பெற்று விற்பனையில் சக்கைப் போடு போட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் எப்போதும், நல்ல வரவேற்பு பெறும் போன்களை ரீபிராண்ட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. அப்படி ஒன்பிளஸ் ஏஸ் 2 (OnePlus Ace 2) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ (OnePlus Ace Pro) ஆகிய போன்களை ஜென்ஷின் இம்பாக்ட் லிமிடெட் எடிஷனாக வெளியிட்டது.

அந்த வரிசையில், ஒன்பிளஸ் 11 5ஜி போனையும் ஜென்ஷின் இம்பாக்ட் லிமிடெட் எடிஷனாக வெளியிட உள்ளதாக அறிவித்தது. இந்த போனின் ரக்கட் ரெட் கார்ப்பெட் டிசைன் மிகப்பெரும் ஆர்வத்தை ஒன்பிளஸ் பிரியர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல சாம்சங் சென்சாருடன் கூடிய கேமரா அம்சங்களும் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. இந்த போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் இப்போது கசிந்துள்ளன. இந்தியாவிலும், சீனாவிலும் இந்த மாதத்தில் (ஜூன்) வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 11 5ஜி அம்சங்கள்: 6.7 இன்ச் (1440 x 3216 பிக்சல்ஸ்) குவாட் எச்டிபிளஸ் (Quad-HD+) அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதோடு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்வ்ட் (curved) டிசைனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 (Android) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்ட் உடன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆக்சிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) கொடுக்கப்பட்டுள்ளது.
சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வருகிறது. அதன்படி 50 எம்பி மெயின் கேமரா + 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 32 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா சோனி ஐஎம்எக்ஸ்709 (Sony IMX709) சென்சாருடன் வருகிறது. 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரோஜ் வசதி உள்ளது. 5,000mAh பேட்டரி 100W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.
இந்த ஒன்பிளஸ் 11 5ஜி போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.64,999 ஆக விற்பனைக்கு வருகிறது. இந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஒன்பிளஸ் 11 ஜென்ஷின் இம்பாக்ட் லிமிடெட் எடிஷன் ரூ. 5,000 அதிகமாக விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications