OnePlus 10T அம்சங்கள்: ஆஹா! ஆரம்பமே அசத்தலா இருக்கே.. மேல சொல்லுங்க..!

|

அமைதிப்படை அமாவாசை போல அடக்கமாக அறிமுகமாகி, இப்போது நாகராஜா சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ-வை போல இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் ஒரு நிறுவனம் என்றால், அது ஒன்பிளஸ் தான்!

பட்ஜெட் மாடல்கள் வந்தாலும் பிளாக்ஷிப் மாடல்களுக்கு தான் மவுசு!

பட்ஜெட் மாடல்கள் வந்தாலும் பிளாக்ஷிப் மாடல்களுக்கு தான் மவுசு!

ஆப்பிள் ஐபோனிற்கு அடுத்தபடியாக, "சும்மா கையில் வைத்து இருந்தாலே கெத்து தான் பாஸ்!" என்கிற ஸ்டேட்டஸ்-ஐ ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் எட்டிவிட்டன என்று கூறினால் அது மிகையாகாது.

இந்தியர்களை மனதில் கொண்டு பட்ஜெட் விலையிலான மாடல்களை அறிமுகம் செய்தாலும் கூட, பெரும்பாலானோர்கள் இன்னமும் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் மாடல்களின் மீதே குறியாக உள்ளனர்.

அப்படியான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் வரிசையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் ஒரு பிளாக்ஷிப் மாடலை அறிமுகப்படுத்தும் நோக்கத்தின் கீழ் ஒன்பிளஸ் நிறுவனம் தீயாக வேலை செய்து வருகிறது.

அது என்ன மாடல்?

அது என்ன மாடல்?

எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் மாடல் ஆனது ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T) என்று அழைக்கப்படலாம். அதாவது இது ஒரு பிளாக்ஷிப் மாடல் தான் ஆனால் 'ப்ரோ' அல்லது 'அல்ட்ரா' என்கிற பெயரை சுமக்காது.

இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் லீக்டு அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இது ஒரு "வெண்ணிலா பிளாக்ஷிப்" ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் சக்திவாய்ந்த சிப்செட் தான், இதில் இருக்கும் ஒரே ஒரு பிரீமியம் அம்சமாகும். ஆக விலையும் கொஞ்சம் கம்மியாக இருக்கலாம்.

அதென்ன சிப்செட்?

அதென்ன சிப்செட்?

சீனாவை சேர்ந்த நம்பகமான பிளாகர் (Chinese Blogger) ஆன @Digital Chat Station (டிஜிட்டல் சாட் ஸ்டேஷன்) வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர்-ஐ பேக் செய்யும். உடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1080p ரெசல்யூஷனுடன் கூடிய 6.67 இன்ச் அளவிலான ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

இந்த டிஸ்பிளேவை, முன்னதாக ஏதோவொரு ஒன்பிளஸ் மாடலில் பார்த்தது போல் இருக்கிறதா? ஆம்! இது ஒன்பிளஸ் 10ஆர் / ஏஸ் மாடல்களில் நாம் பார்த்த அதே டிஸ்பிளே தான்.

நத்திங் போன் 1 பர்ஸ்ட்-லுக் வீடியோ: நோட்டிபிகேஷன் வந்ததும் பேக் பேனல் சும்மா பளபளக்கும்!நத்திங் போன் 1 பர்ஸ்ட்-லுக் வீடியோ: நோட்டிபிகேஷன் வந்ததும் பேக் பேனல் சும்மா பளபளக்கும்!

கேமரா, பேட்டரி-லாம் எந்த ரேன்ஜில் இருக்கும்?

கேமரா, பேட்டரி-லாம் எந்த ரேன்ஜில் இருக்கும்?

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா சென்சார், சிங்கிள் பஞ்ச் ஹோல் வடிவமைப்பிற்குள் உட்பொதிக்கப்படலாம்.

ரியர் கேமராக்களை பொறுத்தவரை, இதில் f/1.8 அப்பெர்சர் மற்றும் 1/1.5 இன்ச் சென்சார் கொண்ட 50எம்பி மெயின் கேமராவை பேக் செய்யலாம். உடன் 8எம்பி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் இடம்பெறலாம்.

வெளியான லீக் தகவல் ஆனது, ஒன்பிளஸ் 10டி மாடலானது 160W சார்ஜருடன் அனுப்பப்படலாம் என்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 150W வேகத்திலான பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,800mAh பேட்டரி உடன் அனுப்பப்படலாம்.

இது தவிர்த்து ஒன்பிளஸ் 10டி குறித்து எக்கச்சக்கமான லீக்ஸ் தகவல்கள் வெளியாகி இருந்தாலும் கூட ஸ்மார்ட்போனின் துல்லியமான அறிமுக தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.

டிஸ்பிளே மட்டும் தான் ரிப்பீட் ஆகுமா? இல்ல டிசைனுமா ?

டிஸ்பிளே மட்டும் தான் ரிப்பீட் ஆகுமா? இல்ல டிசைனுமா ?

ஒயிட், க்ரீன் மற்றும் மின்ட் க்ரீன் என்கிற மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் அறிமுகமாகும் என்று எதிரிபார்க்கப்படும் ஒன்பிளஸ் 10டி ஆனது, வடிவமைப்பை பொறுத்தவரை, பழைய ஒன்பிளஸ் மாடல்களை பின்பற்றாமல் ஒப்போ ரெனோ 8 ப்ரோவை போன்ற ஒரு வடிவமைப்பை பெறுகிறது (லீக் ரெண்டர்களின் அடிப்படையில்).

அதாவது, ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா அமைப்பானது முற்றிலும் வேறுபட்டதாக தெரிகிறது. அந்த வடிவமைப்பு 'எல்' ஸ்டைலில் அமைக்கப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா சென்சார்களையும், எல்இடி ஃபிளாஷையும் ஒரு பெரிய வட்ட வடிவிலான வளையத்தில் உட்பொதிக்கிறது.

முன்பக்க டிசைனிலாவது மாற்றங்களை எதிர்பார்க்கலாமா?

முன்பக்க டிசைனிலாவது மாற்றங்களை எதிர்பார்க்கலாமா?

முன்பக்க வடிவமைப்பை பொறுத்தவரை, பஞ்ச்-ஹோல் பிளேஸ்மென்ட்டைத் தவிர, மேற்கூறிய இரண்டு மாடல்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

இதற்கு முன்னதாக வெளியான ஒரு லீக் ரெண்டர் ஆனது, கேமரா செட்டப் ஆனது இடது விளிம்பில் இருக்கும் என்பது போல் காட்சிப்படுத்தியது; ஆனால் மற்றொரு லீக் ரெண்டரோ அது டாப்-பிரேமில் இருந்து இணைக்கப்பட்டிருப்பது போல் காட்டுகிறது.

லீக்ஸ் என்றாலே, கொஞ்சம் முன்-பின்னாக தான் இருக்கும் என்பதால், எதையும் இறுதிக்கட்ட தகவல்களாக எடுத்துக்கொள்ள முடியாது.

அப்போ ஒன்பிளஸ் 10டி-க்கு வெயிட் பண்ண வேண்டாமா?

அப்போ ஒன்பிளஸ் 10டி-க்கு வெயிட் பண்ண வேண்டாமா?

அப்படி பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லிவிட முடியாது. அதே சமயம் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் கண்டிப்பாக இந்தியாவிலும் அறிமுகமாகும் என்றும் உறுதியளிக்க முடியாது. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்பதும்; எதிர்பார்ப்பதும் நல்லது.

ஏனெனில் ஒன்பிளஸ் நிறுவனம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போன சம்பவங்கள் இருந்தாலும், ஒருபோதும் மிகவும் மோசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது இல்லை.

2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?2 புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்த யமஹா! விலையை சொன்னா நம்புவீங்களா?

ஆகமொத்தம் ஒன்பிளஸ் 10டி ஒரு மோசமான ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பில்லை!

ஆகமொத்தம் ஒன்பிளஸ் 10டி ஒரு மோசமான ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பில்லை!

ஏனெனில், இதுவரையிலாக கிடைத்த லீக்ஸ் தகவல்களின் அடிப்படையில், இது 6.7-இன்ச் அளவிலான எஃப்எச்டி+ எல்டிபிஓ 2.0 அமோஎல்இடி டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர்10+, ஆர்ஜிபி, டிஸ்ப்ளே பி3 கலர் கெமட் மற்றும் அநேகமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் லேயர் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

மேலும் இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் கஸ்டம் ஸ்கின், 16எம்பி செல்பீ கேமரா, 5ஜி, 4ஜி எல்டிஇ, 2×2 MIMO, வைஃபை 802.11 a/b/g/n/ac/ax, ப்ளூடூத் 5.3, எச்பிசி aptX எச்டி & LDAC, என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி, எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், இன்-ஸ்கிரீன் ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற பல அம்சங்களை பேக் செய்யலாம். மேற்கண்ட அம்சங்களில் இதில் 65% நிஜமானாலே, அது நிச்சயம் ஒரு நல்ல ஸ்மார்ட்போனாகத்தான் இருக்கும்.

Image Courtesy: HeyItsYogesh, OnSiteGo, 91Mobiles

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus may launch a new flagship phone by the end of 2022cand it could be the OnePlus 10T. Check expected Design and Specifications.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X