ஒன்பிளஸ் பிரியர்களே ரெடியா?- வருகிறது மற்றொரு மலிவு விலை சாதனம்

|

OnePlus 10T 5G சாதனம் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் சீனாவில் CNY 3,000 மற்றும் CNY 4,000 (இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.35,000 மற்றும் ரூ.47,000) என்ற விலைப் பிரிவுக்கு இடையே அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த சாதனம் ரூ.50,000 கீழ் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனத்தில் பெரிய 4800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த சாதனங்கள் குறித்த விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

பல்வேறு விலைப் பிரிவில் சாதனங்கள்

பல்வேறு விலைப் பிரிவில் சாதனங்கள்

ஒன்பிளஸ் 2022 ஆம் ஆண்டில் தொடர்ந்து பல்வேறு விலைப் பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு வெளியாகும் சாதனங்களின் பட்டியல் இன்னும் முடிவடையவில்லை. பட்டியல் தொடரும் என்பதை குறிக்கும் விதமாக ஒன்பிளஸ் 10டி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது OnePlus 10T சாதனம் இந்தியா உட்பட உலக சந்தையில் ஜூலை மாதம் அறிமுகமாகும் என கசிவு தகவல் கூறுகிறது.

ஒன்பிளஸ் 10 தொடரில் மூன்று சாதனங்கள்

ஒன்பிளஸ் 10 தொடரில் மூன்று சாதனங்கள்

ஒன்பிளஸ் 10 தொடரில் ஒன்பிளஸ் 10 ப்ரோ, ஒன்பிளஸ் 10 ஆர் மற்றும் ஒன்பிளஸ் 10டி ஆகிய மூன்று சாதனங்கள் விரைவில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த சாதனம் மலிவு விலை குறியீட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஒன்பிளஸ் 10டி இன் வடிவமைப்பு ரெண்டர்கள் முன்னதாகவே ஆன்லைனில் தோன்றின. ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தை போன்றே ஹாசல்பிளாட் கேமராக்கள் இதிலும் அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.

பிரத்யேக ஸ்லைடர் பட்டன் இதில் இருக்குமா?

பிரத்யேக ஸ்லைடர் பட்டன் இதில் இருக்குமா?

OnePlus 10T குறித்த சில சுவாரஸ்ய தகவலை விரிவாக பார்க்கலாம். இந்த சாதனம் முந்தை மாடல்களில் இருந்த குறிப்பிட்ட மாறுபாடுகளை கொண்டிருக்கலாம். முந்தைய மாடல்களில் இருந்த ஸ்லைடர் பட்டன் இதில் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆன்லைன் ரெண்டர்கள் பிளாக் வண்ண விருப்பத்தில் இருக்கிறது. இதுவே சாதனத்தின் வண்ண மாதிரியாக இருக்கலாம்.

பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

120 ஹெர்ட்ஸ் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே

OnePlus 10T சாதனமானது 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இதன் மையத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம். முன்புற கேமரா முழு எச்டி வீடியோ பதிவை மட்டுமே ஆதரிக்கும் எனவும் சமீபத்திய ஆண்ட்ராய்டு மேம்பாட்டு ஆதரவோடு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. 1080p வீடியோ பதிவு ஆதரவுடனான 32 எம்பி கேமரா இதில் எதிர்பார்க்கலாம் என்றாலும் ஒன்பிளஸ் 10ஆர் சாதனத்தில் 16 எம்பி கேமரா இருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

மலிவு விலையில் இப்படியொரு சிப்செட்டா?

மலிவு விலையில் இப்படியொரு சிப்செட்டா?

Snapdragon 8 Plus Gen 1 SoC மூலம் இந்த சாதனம் இயக்கப்படும் என கசிவுத் தகவல் தெரிவிக்கிறது. மலிவு விலை சாதனமாக இது இருக்கும் என தகவல் வெளியான பட்சத்தில் இந்த சிப்செட் பொருத்தப்பட்டிக்கும் என்ற தகவல் சற்று வியப்படைய வைக்கிறது. இதன் முந்தைய மாடல்களில் உள்ள ஹீட் சிக்கல் இதிலும் இருக்குமா என்ற விவரம் சாதனம் வெளியான பின்பு தான் தெரிய முடியும்.

150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஒன்பிளஸ் 10ஆர் சாதனத்தில் இல்லாத டஸ்ட் மற்றும் வாட்டர் எதிர்ப்புக்கான ஐபி மதிப்பீடு இதில் இடம்பெறுமா என இதுவரை தெரியவில்லை. சாதனத்தில் 4800 எம்ஏஎச் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Oneplus 10T 5G Smartphone Launching Soon in India: Expected Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X