இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் "இது" இல்லை; இன்னும் 2 வாரம் தான்!

|

நீங்களொரு தீவிரமான ஒன்பிளஸ் விரும்பியாக இருந்தாலும் கூட லேட்டஸ்ட் ஆக அறிமுகமான எந்தவொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுமே, அதாவது ஒன்பிளஸ் 10, ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 2டி என எதுவுமே உங்கள் ஆர்வத்தை தூண்டவில்லையா?

கவலையை விடுங்க! ஏனென்றால்?

கவலையை விடுங்க! ஏனென்றால்?

"இதுவரை அறிமுகமான எந்தவொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் இதுபோல் இல்லை" என்று உங்களை வாய்பிளக்க வைக்கும்படி ரெடியாகி, அறிமுகத்திற்கு தயாராக உள்ளது - ஒன்பிளஸ் 10டி 5ஜி (OnePlus 10T 5G)!

இவ்வளவு 'பில்ட் அப்' செய்யும் அளவிற்கு ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஒன்பிளஸ் 8டி-க்கு பின் வரும்

ஒன்பிளஸ் 8டி-க்கு பின் வரும் "நிஜமான" டி சீரீஸ் மாடல்!

உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம், இந்தியாவில் கடைசியாக அறிமுகமான பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 'டி' சீரீஸ் ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் 8டி (OnePlus 8T) தான்.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 9 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 9டி என்கிற மாடலை அறிமுகம் செய்யவில்லை; புறக்கணித்து விட்டது. ஏன் என்பதற்கு பெரிய காரணங்களும் சொல்லப்படவில்லை. இப்போது நமக்கு அது அவசியமும் இல்லை.

பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!பட்ஜெட் விலையில் 2K டிஸ்பிளே, 8340mAh பேட்டரி; Samsung-ஐ மிரட்டும் புதிய Realme Pad!

ஒன்பிளஸ் 10டி ஏன் ஸ்பெஷல்?

ஒன்பிளஸ் 10டி ஏன் ஸ்பெஷல்?

பொதுவாகவே, ஆண்டின் இறுதியில் வெளியாகும் ஒன்பிளஸ் டி சீரீஸ் ஸ்மார்ட்போன் என்றாலே ஸ்பெஷல் தான். ஏனெனில் அது குறிப்பிட்ட ஆண்டில் வெளியான எல்லா ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களையும் 'தூக்கி சாப்பிடும்' அம்சங்களை பேக் செய்யும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே பிளாக்ஷிப் டி சீரீஸ் மாடல்கள் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் வந்து குவியும். கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 9டி மாடல் வேறு அறிமுகமாகவே இல்லையா? இதனால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒன்பிளஸ் நிறுவனத்திற்கும் கூட 10டி மாடல் - ரொம்ப ஸ்பெஷல்!

எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும்?

எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும்?

இந்த ஜூலை மாதமே அறிமுகமாகும். இன்னும் குறிப்பிட்டு சொன்னால், ஜூலை 25 - ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படலாம்.

அட உண்மைதாங்க! ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் கூட, இதுவரை கிடைத்த "முக்கால்வாசி" லீக் தகவல்கள் ஆனது, இது ஜூலை மாதத்திலேயே அறிமுகமாகும் என்று கூறுகின்றன.

அதாவது இன்னும் 2 வாரங்களில் அறிமுகமாகி விடும். மிஞ்சி போனால் வருகிற ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகி விடும்.

Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!Vivo T1x இந்திய அறிமுகம் உறுதி; பல பட்ஜெட் போன்களை வச்சி செய்ய போகுது!

இதுவரை எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத

இதுவரை எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத "அந்த" அம்சம்.. என்னது?

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மாவின் சமீபத்திய லீக் தகவலின்படி, ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சீனாவின் 3C சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தி உள்ளது.

அதன்படி, OnePlus 10T 5G ஆனது 160W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருமாம். நினைவூட்டும் வண்ணம், இதுவரை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற அதிகப்பட்ச ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் 150W ஆகும், இது ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றது.

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

OnePlus 10T 5G ஆனது ஃபுல் எச்டி+ ரெசல்யூஷனுடன் 6.7 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம். ஒன்பிளஸ் நிறுவனம் இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் AMOLED டிஸ்ப்ளேவை பயன்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் அலெர்ட் ஸ்லைடரையும் நாம் எதிர்பார்க்காலம். இது பெரும்பாலும் Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

கேமரா, பேட்டரிலாம் எப்படி இருக்கும்?

கேமரா, பேட்டரிலாம் எப்படி இருக்கும்?

கேமராக்களை பொறுத்தவரை, இதன் மெயின் கேமராவானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (optical image stabilization - OIS) உடனான 50 மெகாபிக்சல் சென்சார் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மற்ற கேமராக்கள் குறித்து பெரிய அளவிலான தகவல்கள் இல்லை. ஆனாலும் இது ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் கேமரா செட்டப்பை முடிந்தவரை "காப்பி அடிக்க" அதிக வாய்ப்பு உள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வரலாம். இதன் கேமரா சாஃப்டவேர் ஆனது ஹாசல்ப்ளாட் மாஸ்டர் ஸ்டைலை (Hasselblad Master Style) கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது (இது கேமரா சிஸ்டமின் மூன்று ப்ரீசெட்களுக்கு இடையே ஒன்றை தேர்வு செய்யும் திறனை யூசர்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது)

160W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வரும் OnePlus 10T 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4,800mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா "இதை" பண்ணுங்க! இல்லனா?

இந்தியாவில் OnePlus 10T 5G என்ன விலைக்கு வரும்?

இந்தியாவில் OnePlus 10T 5G என்ன விலைக்கு வரும்?

இதுவரை மூன்ஸ்டோன் பிளாக் கலர் ஆப்ஷனில் மட்டுமே லீக் ஆகியுள்ள ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெளியாகும் நேரத்தில் இன்னும் வேறு சில வண்ணங்களில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இதன் 8ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.65,300 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல் ஆனது தற்போது ரூ.66,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Photo Courtesy: OnePlus

Best Mobiles in India

English summary
OnePlus 10T 5G Smartphone Expect to Pack 160W Fast Charging Support launch between July 25 and August 1

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X