OnePlus போன் வாங்கனுமா? ஓடியாங்க பிரபலமான 5G போனுக்கு நம்பமுடியாத விலை குறைப்பு.!
ஒன்பிளஸ் நிறுவனம் பிரபலமான ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மாரட்போனுக்கு சலுகை வழங்கியுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் Fab Phones Fest sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தான் ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி
அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் முன்பு ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.5000 வரை இந்த ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.44,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் உள்ளது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2412 X 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
இந்த ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இது தெர்மல் பெர்ஃபார்ம்மென்ஸை மேம்படுத்தும் மற்றும் OnePlus 10 Pro மாடலை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாகப் பயன்படும். அதேபோல் OxygenOS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனால் கூடிய விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

ஹைப்பர்பூஸ்ட் கேமிங்..
ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் நினைத்த அனைத்து ஆப்ஸ்களையும் எளிமையாக பயன்படுத்த முடியும். OnePlus 10T ஆனது புதிய ஹைப்பர்பூஸ்ட் கேமிங் இன்ஜினையும் பேக் செய்கிறது, இது நீண்ட நேர கேமிங்கின் போது ஸ்மார்ட்போனின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.

50-மெகாபிக்சல் சோனி IMX769 மெயின் சென்சார்
OnePlus 10T ஆனது டூயல் LED ஃபிளாஷ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50-மெகாபிக்சல் சோனி IMX769 மெயின் சென்சார் (f/1.8 லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் ( 119.9 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ, f/2.2 லென்ஸ்) + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

150W SuperVooc ஃபாஸ்ட் சார்ஜிங்..
OnePlus 10T ஸ்மார்ட்போன் ஆனது 150W SuperVooc ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்ட 4500mAh பேட்டரி உடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, "இது முதல் மூன்று நிமிடங்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் சார்ஜ் செய்யும்". 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்-ஐ கொடுக்கும் என்றும் OnePlus குறிப்பிடுகிறது. நிறுவனத்தின் இந்த புதிய சார்ஜிங் தொழில்நுட்பம் ஆனது 13 வெப்பநிலை சென்சார்கள் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் அல்காரிதம் ஆகியவற்றுடன் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கூறப்படுகிறது.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
OnePlus 10T ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications