அதுக்குள்ள இந்தியாவுக்கு வரும் அடுத்த OnePlus போன்; விலை தான் அல்டிமேட்!

|

ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனிற்கு பிறகு ஒன்பிளஸ் 9T அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால் ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன் ஆக OnePlus 10T 5G உருமாறியுள்ளது.

மேலும் 10டி மாடல் ஆனது இந்த 2022 ஆம் ஆண்டில் வெளியாகும் ஒன்பிளஸின் கடைசி ப்ரீமியம் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும். இதற்கிடையில், இது எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தகவலும், இது என்ன விலைக்கு வரும் என்கிற விவரமும் வெளியாகி உள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரமே இந்திய அறிமுகம்!

ஆகஸ்ட் முதல் வாரமே இந்திய அறிமுகம்!

கிடைக்கப்பெற்றுள்ள தகவலின்படி, ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

அதே தகவல், OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் ஆனது ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

'க்ளோபல் லான்ச்' எப்போது?

'க்ளோபல் லான்ச்' எப்போது?

MobilesTalk வழியாக கிடைக்கப்பெற்றுள்ள இந்த லேட்டஸ்ட் தகவலின்படி, OnePlus 10T 5G ஆனது ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும்.

இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடும் அதே நேரத்தில் நடைபெறுமா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.

ஆனால் ஒன்பிளஸ் இன்னும் வாயை திறக்கவில்லை!

ஆனால் ஒன்பிளஸ் இன்னும் வாயை திறக்கவில்லை!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுகம் குறித்து OnePlus நிறுவனம் எந்த வகையான தகவலையும் இன்னும் வழங்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எனவே ஆகஸ்ட் 3 என்கிற அறிமுக தேதியை "மேலோட்டமாக" எடுத்துக்கொள்வது நல்லது.

நினைவூட்டும் வண்ணம் முன்னதாக, OnePlus 10T 5G-யின் இந்திய அறிமுகமானது ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு இடையில் நடக்கும் என்று கூறப்பட்டது. தற்போது அது ஆகஸ்ட் 3 ஆக மாறியுள்ளது.

ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!ரூ.30,000 க்குள் நீங்க வேற ஏதாச்சும் ஒரு 43-inch TV வாங்குனா.. நாங்க பொறுப்பில்ல!

16ஜிபி ரேம்-ஐ பேக் செய்யும்!

16ஜிபி ரேம்-ஐ பேக் செய்யும்!

ஒன்பிளஸ் 10T 5G ஸ்மார்ட்போனின் மூன்ஸ்டோன் பிளாக் கலர் ஆப்ஷன் ஆனது 16 ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஜேட் கிரீன் கலர் வேரியண்ட் ஆனது 16 ஜிபி ரேம் ஆப்ஷனை வழங்காது என்றும் கூறப்படுகிறது.

ஆக வரவிருக்கும் OnePlus 10T 5G ஸ்மார்ட்போனின் 16GB ஆப்ஷன் ஆனது இந்திய மற்றும் சீன சந்தைகளுக்கு பிரத்யேகமானதாக இருக்கலாம். அதாவது 16ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது மற்ற உலக சந்தைகளில் அறிமுகமாகாமல் போகலாம் என்று அர்த்தம்.

OnePlus 10T இல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

OnePlus 10T இல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

இதுவரை வெளியான அறிக்கைகளின்படி, ஒன்பிளஸ் 10டி 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான OxygenOS 12 கொண்டு இயங்கலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் என்கிற அளவிலான ஃபுல்-எச்டி+ AMOLED பேனல் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒன்பிளஸின் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் கொண்டு இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 "மாற்று" ஸ்மார்ட்போன்கள்!

கேமராக்கள் எப்படி இருக்கும்?

கேமராக்கள் எப்படி இருக்கும்?

புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவிற்காக, இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம்.

இதன் கேமரா யூனிட்டில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் செகண்டரி ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, OnePlus 10T 5G ஆனது 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை பெறலாம்.

பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் எல்லாம் எப்படி இருக்கும்?

பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் எல்லாம் எப்படி இருக்கும்?

ஒன்பிளஸ் 10டி 5ஜி ஆனது 4800mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த செல் 150W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

இருப்பினும் லேட்டஸ்ட் லீக் ஒன்று, இது 160W ஃபாஸ்ட் சார்ஜ்ங்கை பேக் செய்யும் என்று பரிந்துரைக்கிறது. அது உண்மையாகும் பட்சத்தில், இந்த அளவிலான ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுடன் வரும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 10டி 5ஜி இருக்கும்.

Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!

OnePlus 10T 5G இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் ?

OnePlus 10T 5G இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் ?

இதுவரை கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவல்களின் படி, ஒன்பிளஸ் 10டி 5ஜி-யின் பேஸிக் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

அறிமுக தேதியை போலவே இதுவும் லீக்ஸ் தகவல்கள் வழியாக கிடைத்த விவரம் தான். எனவே இந்த விலையை இறுதி விலையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்?

எந்த இகாமர்ஸ் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும்?

வழக்கம் போல இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் அமேசான் தளம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் வருகை குறித்து எந்த டீசரையும் இதுவரை வெளியிடவில்லை. வரும் வாரங்களில் ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட் 'லைவ்' ஆகலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இப்போதைக்கு ஒன்பிளஸ் 10டி 5ஜி பற்றி எங்களிடம் உள்ள தகவல்கள் இவ்வளவு தான். மேலதிக விவரங்கள் வெளியாகும் பட்சத்தில் அதை கிஸ்பாட் தமிழ் வலைத்தளத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

Photo Courtesy: OnePlus

Best Mobiles in India

English summary
OnePlus 10T 5G India Launch Date, Price, Color Options Leaked Check Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X