புது OnePlus 10R Prime Blue Edition ரெடி.! Amazon சிறப்பு விற்பனையில் சலுகையுடன் வாங்கலாமா?

|

OnePlus நிறுவனம் இந்த ஆண்டு பல புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை Nord மற்றும் 10 சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்துள்ளது. அப்படி சமீபத்தில் OnePlus நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் தான் இந்த OnePlus 10R 5G சாதனமாகும். இந்த OnePlus 10R 5G ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் இரண்டு வண்ண விருப்பங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்த OnePlus 10R 5G சாதனத்தை நிறுவனம் மற்றொரு புதிய (OnePlus 10R Prime Blue Edition) வண்ண விருப்பத்துடன் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

புதிய OnePlus 10R 5G கலர் வேரியண்ட் இந்தியாவில் விற்பனையா?

புதிய OnePlus 10R 5G கலர் வேரியண்ட் இந்தியாவில் விற்பனையா?

இந்த புதிய OnePlus 10R 5G கலர் வேரியண்ட் ப்ளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு தேதியையும் OnePlus இன்று வெளியிட்டுள்ளது. OnePlus நிறுவனம், இப்போது OnePlus 10R Prime Blue Edition என்ற ப்ளூ கலர் வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இதற்கு முன்பு இந்த சாதனம் சியரா பிளாக் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் மட்டும் கிடைத்தது.

எப்போது இந்த புதிய OnePlus 10R Prime Blue Edition மாடல் வாங்க கிடைக்கும்?

எப்போது இந்த புதிய OnePlus 10R Prime Blue Edition மாடல் வாங்க கிடைக்கும்?

இந்த சமீபத்திய அறிவிப்பின் படி, OnePlus 10R 5G மாடலின் இந்தியாவில் கிடைக்கும் மூன்றாவது வண்ண விருப்பமாக இந்த சாதனம் ப்ளூ எடிஷன் திகழ்கிறது. இந்த புதிய ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் சாதனம், வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையின் போது வாங்குவதற்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் பயனர்களுக்கு இது ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 22 முதல் வாங்குவதற்குக் கிடைக்கும்.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

80W மற்றும் 150W பாஸ்ட் சார்ஜிங் OnePlus 10R 5G வேரியண்ட்

80W மற்றும் 150W பாஸ்ட் சார்ஜிங் OnePlus 10R 5G வேரியண்ட்

OnePlus 10R 5G ஸ்மார்ட்போனின் பிரைம் ப்ளூ எடிஷன் மற்ற இரண்டு வண்ண விருப்பங்களைப் போலவே அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது இரண்டு சார்ஜிங் வகைகளுக்கும் வண்ண விருப்பத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, OnePlus 10R 5G இந்தியாவில் 80W மற்றும் 150W பாஸ்ட் சார்ஜிங் வேரியண்ட் என 2 மாடல்களாக அறிமுகப்படுத்தப்பட்டது.

எந்த வேரியண்ட் மாடல் என்ன விலையில் கிடைக்கிறது?

எந்த வேரியண்ட் மாடல் என்ன விலையில் கிடைக்கிறது?

80W வேரியண்ட் மாடல் OnePlus 10R 5G சாதனம் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. அதேசமயம், 150W பாஸ்ட் சார்ஜிங் வேரியண்ட் OnePlus 10R 5G மாடல் 4500mAh பேட்டரியை பேக் செய்கிறது. OnePlus 10R 5G போனின் 80W வேரியண்ட் ரூ.38,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதேசமயம் 12ஜிபி ரேம் கொண்ட 150W வேரியன்டின் விலை ரூ.42,999 ஆக இருக்கிறது. 150W வேரியண்ட் மாடல் மட்டும் ஒற்றை சியரா பிளாக் வண்ண விருப்பத்தில் மட்டுமே கிடைக்கிறது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

ஒன்பிளஸ் 10 ஆர் 5ஜி பிரைம் ப்ளூ எடிஷனில் என்ன எதிர்பார்க்கலாம்?

ஒன்பிளஸ் 10 ஆர் 5ஜி பிரைம் ப்ளூ எடிஷனில் என்ன எதிர்பார்க்கலாம்?

ஒன்பிளஸ் 10 ஆர் 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் 80W மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் விருப்பங்களுடன் தொடங்கப்படுமா என்பது உறுதியாகவில்லை. சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, OnePlus 10R 5G பன்ச் ஹோல் கட் அவுட்டுடன் 6.7' இன்ச் 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த சாதனம் ஒன்பிளஸின் அலெர்ட் ஸ்லைடரை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்புறத்தில் 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட 50MP டிரிபிள்-கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

OnePlus 10R Prime Blue Edition போனை சலுகையுடன் வாங்கலாமா?

OnePlus 10R Prime Blue Edition போனை சலுகையுடன் வாங்கலாமா?

இது MediaTek Dimensity 8100 MAX சிப்செட் உடன் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த புதிய பிரைம் ப்ளூ எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலும் 12GB ரேம் வரை இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 12ல் இயங்குகிறது. ப்ளூ கலர் பிரியர்களுக்கு இந்த OnePlus 10R Prime Blue Edition நிச்சயமாகப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. Amazon Great Indian Festival விற்பனை போது இது கிடைக்கும் என்பதனால் கூடுதல் சலுகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 10R Prime Blue Edition Will Be Available During Amazon Great Indian Festival Sale 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X