நத்திங் அறிமுகத்தின் விளைவு: OnePlus ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு!

|

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் தளங்கள் அந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ப்ரீமியம் ஸ்மார்ட்போன் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதீத தள்ளுபடியில் OnePlus 10R 5G

அதீத தள்ளுபடியில் OnePlus 10R 5G

OnePlus 10R 5G ஆனது ஏப்ரல் 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.38,999 என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் இன் ப்ரீமியம் மாடல் ஆகும். OnePlus 10R 5G வெளியான மூன்று மாதங்களில் பெரும் தள்ளுபடியை பெற்றிருக்கிறது.

பிரத்யேக அம்சத்தோடு அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன்

பிரத்யேக அம்சத்தோடு அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன்

OnePlus 10R ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். 150 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் ஆதரவோடு இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த புதிய தொழில்நுட்பத்துடன் வெளியான OnePlus 10R ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஸ்மார்ட்போனை 0 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை 17 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.

தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி

தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி

OnePlus 10R ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.38,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமானது. ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ப்ரீமியம் விலை ஸ்மார்ட்போன் வெளியான மூன்று மாதங்களுக்குள் அதீத தள்ளுபடியை பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு எவ்வளவு தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது, இந்த தள்ளுபடியை எப்படி பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தள்ளுபடி மட்டும் எவ்வளவு தெரியுமா?

தள்ளுபடி மட்டும் எவ்வளவு தெரியுமா?

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் வாங்கும் போது ரூ.3000 தள்ளுபடி கூப்பனை பயன்படுத்தலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்களை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.1000 தள்ளுபடியை பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999 என குறைந்த விலையில் வாங்கலாம்.

மேம்பட்ட வேரியண்ட் அடிப்படை விலையில் வாங்கலாம்

மேம்பட்ட வேரியண்ட் அடிப்படை விலையில் வாங்கலாம்

இதன் மேம்பட்ட வேரியண்ட் ஆன 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலைக்கு வாங்கலாம். 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.42,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்டது போல் கூப்பன் சலுகை மற்றும் வங்கித் தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.38,999 என வாங்கலாம். இது 8 ஜிபி ரேம் வேரியண்ட் ஸ்மார்ட்போனின் நிர்ணய விலை ஆகும்.

சமீபத்தில் அறிமுகமான 150வாட்ஸ் சார்ஜிங் பதிப்பு

சமீபத்தில் அறிமுகமான 150வாட்ஸ் சார்ஜிங் பதிப்பு

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தியாவில் ஒன்பிளஸ் 10R 5G ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ஒன்பிளஸ் 10R 5G இன் 150 வாட்ஸ் பதிப்பாகும். இந்த பதிப்பின் ஆரம்ப விலை ரூ.43,999 க்கு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் என்ன?

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் என்ன?

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பெரிய டிஸ்ப்ளேவுடன் வெளி வந்திருக்கிறது. அதாவது இந்த போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 2400 X 1080 பிக்சல்கள், 20:9 ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டிருக்கிறது. டிஸ்ப்ளேவை விட இதன் சிப்செட் வசதி தான் அருமையாக இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 8100 Max சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கிறது.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என்ற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. குறிப்பாக குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட அருமையான படங்களை பதிவு செய்ய இந்த கேமராக்கள் அனுமதிக்கிறது.

இஐஎஸ் ஆதரவுடன் கூடிய 16 எம்பி செல்பி கேமரா

இஐஎஸ் ஆதரவுடன் கூடிய 16 எம்பி செல்பி கேமரா

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் இஐஎஸ் ஆதரவுடன் கூடிய 16 எம்பி கேமரா இதில் இருக்கிறது. இதன் உதவியுடன் அருமையான செல்பி படங்களை எடுக்க முடியும். இதுதவிர எல்இடி பிளாஷ் உட்பட பல கேமரா அம்சங்களை இது கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். சமூகவலைதள பயன்பாடு, கேமிங் என அனைத்தையும் நீங்கள் நீண்ட நேரம் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாமா?

இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாமா?

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சியரா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. மொத்தமாக ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி போன் அருமையான அம்சங்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் உடனே அமேசான் இணையதளத்தை அணுகவும்.

நத்திங் ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் விளைவு

நத்திங் ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் விளைவு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நத்திங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இந்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு அதவும் நத்திங் ஸ்மார்ட்போன் விலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 10R 5G Smartphone Now Available with Huge Discount price: Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X