கரெக்ட்டா பிளான் செஞ்சா ரூ.999 செலவில் உறுதியா OnePlus 10R 5G Prime Edition வாங்கிடலாம்.!

|

OnePlus 10R 5G பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் (OnePlus 10R 5G Prime Edition), Amazon வழியாக இப்போது முன்கூட்டிய ஆர்டருக்கு இந்தியாவில் கிடைக்கிறது. அமேசானில் வரவிருக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் சீசன் விற்பனைக்கு முன்னதாக, ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் OnePlus 10R இன் பிரைம் ப்ளூ எடிஷனை செப்டம்பர் 22 ஆம் தேதி கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக, புதிய OnePlus 10R 5G பிரைம் ப்ளூ எடிஷன் முன்கூட்டியே பதிவு செய்யக் கிடைக்கிறது.

OnePlus 10R 5G Prime Edition இப்போதே ப்ரீ-புக்கிங் செய்ய கிடைக்கிறதா?

OnePlus 10R 5G Prime Edition இப்போதே ப்ரீ-புக்கிங் செய்ய கிடைக்கிறதா?

OnePlus 10R 5G Prime Edition அதன் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு சிறப்பு எடிஷன் போனாக ஒன்பிளஸ் நிறுவனத்திலிருந்து அறிமுகம் செய்யப்படுகிறது. பிரைம் புளூ எனப்படும் புதிய வண்ண விருப்பமாக இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. OnePlus 10R 5G Prime Edition மீது ரூ. 3,500 வரை தள்ளுபடி கிடைக்கிறது மற்றும் அனைத்து சலுகைகளுடன், இந்த சாதனம் ரூ. 29,499 விலையில் கிடைக்கும் என்று அமேசான் போஸ்டர் பரிந்துரைக்கிறது.

OnePlus 10R 5G பிரைம் ப்ளூ எடிஷன் விலை என்ன?

OnePlus 10R 5G பிரைம் ப்ளூ எடிஷன் விலை என்ன?

OnePlus 10R 5G பிரைம் எடிஷனின் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.32,999 ஆக இருக்கிறது. இப்போதைக்கு, Amazon இல் முன்கூட்டிய ஆர்டருக்கு இந்த ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் மட்டுமே கிடைக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஒன்பிளஸ் 10R ஸ்மார்ட்போனின் வழக்கமான விற்பனை விலையை விட, இந்த விலை ரூ.2,000 குறைவு என்று குறிப்பிடத்தக்கது.

வண்டி நம்பர் பிளேட் விபரங்களை வைத்து உரிமையாளரை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி?வண்டி நம்பர் பிளேட் விபரங்களை வைத்து உரிமையாளரை ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி?

OnePlus 10R 5G Prime Blue Edition முன்கூட்டிய ஆர்டர் விபரம்

OnePlus 10R 5G Prime Blue Edition முன்கூட்டிய ஆர்டர் விபரம்

OnePlus 10R 5G Prime Blue Edition விருப்பம் இப்போது Amazon இல் முன்கூட்டிய ஆர்டர் செய்யக் கிடைக்கிறது. ஆர்வமுள்ள ஒன்பிளஸ் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அமேசானில் வெறும் ரூ. 999 மட்டும் செலுத்தி, உங்களுக்கான OnePlus 10R 5G Prime Edition போனை முன்பதிவு செய்யலாம். முழுமையான பர்சேஸை முடிக்க நீங்கள் செப்டம்பர் 22, 12 AM முதல் செப்டம்பர் 24, 12 AM மணிக்குள் உங்களுக்கான முன்பதிவு செய்யப்பட்ட போனை வாங்கிக்கொள்ளலாம்.

ரூ.999 முன்பதிவுத் தொகை திரும்ப கிடைக்குமா?

ரூ.999 முன்பதிவுத் தொகை திரும்ப கிடைக்குமா?

நீங்கள் செலுத்திய முன்பதிவுத் தொகையான ரூ.999, உங்கள் Amazon Pay இருப்புத் தொகையாகக் கிரெடிட் செய்யப்படும். கூடுதலாக, அமேசான் OnePlus 10R 5G Prime Edition ஸ்மார்ட்போனை கூடுதல் வங்கி சலுகைகளுடன் வாங்கும் போது, இந்த சாதனத்தின் விலையை ரூ.29,499 ஆக குறைக்க முடியும். கூடுதலாக, உங்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை மூன்று மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

OnePlus 10R 5G Prime Edition சிறப்பம்சம்

OnePlus 10R 5G Prime Edition சிறப்பம்சம்

OnePlus 10R ஸ்மார்ட்போனின் இருக்கும் அதே அம்சம் தான் இந்த பிரைம் எடிஷனிலும் கிடைக்கும். இது முழு HD+ தெளிவுத்திறனுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7' இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது MediaTek Dimensity 8100-Max சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. OnePlus 10R 5G Prime Edition ப்ளூ வண்ண விருப்பம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000 mAh பேட்டரி மூலம் பேக் செய்யப்பட்டுள்ளது.

OnePlus 10R 5G Prime Edition கேமரா விபரம்

OnePlus 10R 5G Prime Edition கேமரா விபரம்

கேமரா அம்சத்தைப் பற்றி பார்க்கையில், இது 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா சென்சார் உடன் 50MP பிரதான கேமராவுடன் ட்ரிபிள்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது 16MP சென்சார் உடன் வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் OS 12.1 இல் இயங்குகிறது. இந்த தீபாவளிக்கு பட்ஜெட் செக்மென்ட்டில் 5ஜி இணைப்புடன் ஒரு தரமான ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால் இந்த OnePlus 10R 5G Prime Edition போனை வாங்குங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 10R 5G Prime Edition Now Available for Pre-Orders On Amazon For Rs 999 Only

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X