புதுமைனா இதுதான்- 150W எண்டூரன்ஸ் பதிப்பு, சூப்பர்வூக் சார்ஜிங்: "ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி" இந்தியாவில் அறிமுகம்!

|

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது 150 வாட்ஸ் எண்டூரன்ஸ் பதிப்பு, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங், டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி வசதியோடு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஆனது இரண்டு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது இரண்டு வேரிண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக வருகிறது. 150 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய எண்டூரன்ஸ் பதிப்பு, மற்றொன்று 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய மலிவு விலை மாடலாக இது இருக்கிறது.

மீடியா டெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி ஆதரவு

மீடியா டெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி ஆதரவு

இது தனிப்பயன் வடிவமைப்பக்கப்பட்ட மீடியா டெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி குளிர்விக்கும் அமைப்பு மற்றும் ஹைப்பர்பூஸ்ட் கேமிங் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஆனது 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இரட்டை ஸ்டீரியா ஸ்பீக்கர்கள் மற்றும் பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி இந்தியா விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி இந்தியா விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவு கொண்ட 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவு கொண்ட 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 150 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் எண்டூரன்ஸ் பதிப்பு ஆதரவு கொண்ட 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என கிடைக்கிறது. அதேபோல் 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவு கொண்ட 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.38,999 எனவும் 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவு கொண்ட 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.42,999 எனவும் 150 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் எண்டூரன்ஸ் பதிப்பு ஆதரவு கொண்ட 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.43,999 எனவும் இருக்கிறது.

150 வாட்ஸ் சார்ஜிங் பதிப்பு

150 வாட்ஸ் சார்ஜிங் பதிப்பு

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது 80 வாட்ஸ் சார்ஜிங் பதிப்பு ஃபாரஸ்ட் க்ரீன் மற்றும் சைரா பிளாக் வண்ண விருப்பம், 150 வாட்ஸ் சார்ஜிங் பதிப்பு சைரா பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி எண்டூரன்ஸ் பதிப்பு விற்பனை மே 4 மதியம் 12 மணிக்கு அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் செயலியில் கிடைக்கும். ஒன்பிளஸ் பிரத்யேக கடைகள், ரிலையன்ஸ் டிஜிட்டஸ் ஸ்டோர்ஸ் மற்றும் க்ரோமா ஆகியவற்றிலும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களில் வாங்கலாம்.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ), ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12.1 ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்செல்கள்) தீர்மானம் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 720 ஹெர்ட்ஸ் ரெஸ்பான்ஸ் ரேட் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த சாதனம் 2.5டி வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது. ஹூட்டின் கீழ், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி ஆதரவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

ஹைப்பர்பூஸ்ட் கேமிங் இன்ஜின் வசதி

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனானது எஸ்ஓசி மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட் ஆனது 11 சதவீதம் சிறந்த மல்டி கோர் செயல்திறன், 20 சதவீதம் மேம்படுத்தப்பட்ட ஜிபியூ செயல்திறன், 25 சதவீதம் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் திறன் மற்றும் 80 சதவீதம் சிறந்த ஏஐ செயல்திறந் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் ஆனது 3டி செயலற்ற குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இதில் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க 4100 மிமீ சதுர நீராவி அறையை பயன்படுத்துகிறது. கேமிங் செயல்திறனுக்கு என ஹைப்பர்பூஸ்ட் கேமிங் இன்ஜின் மற்றும் ஜெனரல் பெர்ஃபார்மன்ஸ் அடாப்டர் ஃப்ரேம் வசதியைக் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி சாதனத்தின் கேமரா அம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி சாதனத்தின் கேமரா அம்சங்கள்

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி சாதனத்தின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை சென்சார் ஆதரவு, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சோனி ஐஎம்எஸ்355 சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியைக் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி சாம்சங் ஐசோசெல் சென்சார் வசதியோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இந்த சாதனத்தில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ஒன்பிளஸ் 10 ஆர் 5ஜி 150 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் எண்டூரன்ஸ் பதிப்பு மாடல் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. அதேபோல் 80 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பதிப்பு 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus 10R 5G Launched in India with 150W Endurance Edition and 80W SuperVooc Charging: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X