Home
News

காத்திருப்போம்: வருகிறது ஒன்பிளஸ் 10 ப்ரோ- வெளியீடுத்து தேதி இதுதான், விலை, அம்சங்கள் இதுவாக இருக்கலாம்!

ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய வெளியீடு மார்ச் 22 அல்லது மார்ச் 24 தேதிகளில் நடைபெறலாம் என டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த போனின் இந்திய வெளியீட்டு டீசர் முன்னதாகவே வெளியாகியுள்ளது. ஒன்ப்ளஸ் 10 ப்ரோ விலை ரூ.55,000 முதல் ரூ.60,000 விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ

ஒன்பிளஸ் 10 ப்ரோ

ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்தியாவில் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் சமீபத்தில் ஒன்பிளஸ் 10 ப்ரோவை ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற பல சந்தைகளுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். வெளியீட்டு தேதியை அவர் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார், இந்த வெளியீடு மார்ச் 22 அல்லது மார்ச் 24 ஆகிய தேதிகளில் நடைபெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிராண்டின் முதன்மை சாதனம்

பிராண்டின் முதன்மை சாதனம்

ஒன்பிளஸ் 10 ப்ரோ என்பது பிராண்டின் முதன்மை சாதனமாகும், இது முன்னதாகவே சீனாவில் கிடைக்கிறது. குவால்காமின் டாப்-எண்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 80 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்ட குறிப்பிடத்தக்க சில ஸ்மார்ட்போன்களில் இது பிரதானமானவை ஆகும்.

ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கான டீசர்கள்

ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கான டீசர்கள்

இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கான டீசர்கள் அடுத்த சில நாட்களில் வரும் என்று மேற்கோள் காட்டப்படும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் இந்திய விலை ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் சீனாவில் சிஎன்ஒய் 4,699-க்கு விற்கப்படுகிறது, இது இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.54,500 ஆகும். சாம்சங் மற்றும் ஆப்பிள் வழங்கும் ஃபிளாக்ஷிப் போன்களுக்கு இணை போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

6.7-இன்ச் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே

6.7-இன்ச் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே

ஒன்ப்ளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே, க்யூ எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் மற்றும் 1300 நிட்ஸ் அதிகபட்ச பிரகாசத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் வரையிலான புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது, அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பு ஆதரவோடு வருகிறது.

5,000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5,000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் இயக்கப்படும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் டால்பி அட்மாஸ் ஆதரவை இது கொண்டிருக்கிறது.

50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா

50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா

புகைப்படம் எடுப்பதற்கு, 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்789 கேமரா மற்றும் ஓஐஎஸ், 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் உடன் கூடிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. மூன்றாவது கேமராவாக இந்த சாதனத்தில் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு 3.3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் ஆதரவைக் கொண்டுள்ளது மற்றும் 8 கே வீடியோக்கள் வரை பதிவு செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சாரைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Oneplus 10 Pro might be Launching on March 22 or March 24: Expected Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X