இது என்ன அப்படி: ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தை விட ஒன்பிளஸ் 10 ப்ரோ மலிவு விலையில் அறிமுகம்?- காரணம் இதோ!

|

ஒன்பிளஸ் நெக்ஸ்ட் ஜென் ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனம் ஜனவரி 11 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது. ஒன்பிளஸ் எப்போதும் ஒரே நேரத்தில் நிலையான மற்றும் ப்ரோ மாடல் சாதனம் இரண்டையும் அறிவிக்கும். ஆனால் இந்த முறை பிராண்ட் நிலையான மாடலை இதன் சிறிது நேரத்துக்கு பிறகு வெளியிடும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 சாதனத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தற்போது வரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரோ மாடலுக்கான முக்கிய அம்சங்கள்

ப்ரோ மாடலுக்கான முக்கிய அம்சங்கள்

இதன் ப்ரோ மாடலுக்கான முக்கிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு முன்னதாகவே ஆன்லைனில் வெளிவந்தன. அதிகாரப்பூர்வ டீசர் பின்புற பேனல் வடிவமைப்பை உறுதி செய்திருக்கிறது. தற்போது ஒன்பிளஸ் 10 ப்ரோவின் விலை அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக சீன சில்லறை விற்பனையாளர் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் விலை

ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் விலை

ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் விலை அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ தற்போது சீனாவில் பல இ-காமர்ஸ் தளங்களில் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்களில் வரும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ மூன்று வேரியண்ட்களில் வரும் என சீன சில்லறை விற்பனையாளர் பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35,000 ஆக இருக்கும் எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.46,700 ஆக இருக்கும் எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.58392 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ: ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தை விட மலிவாக இருக்குமா

ஒன்பிளஸ் 10 ப்ரோ: ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தை விட மலிவாக இருக்குமா

தற்போது வரை ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் விலை குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனமானது கடந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தை விட மலிவானதாக இருக்கிறது.

வரவிருக்கும் ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனமானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோவின் அறிமுகம் சிஇஓ பீட் லாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தனது வெய்போ தளத்தில் வெளியீட்டு காலவரிசையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் சரியான வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை என்றாலும் வதந்திகள்படி ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர், ஜனவரி 5 ஆம் தேதி லாஸ் வேகாஸில் ஒன்பிளஸ் ஒரு வெளியீட்டு நிகழ்வை நடத்துவதாக கூறினார். எனவே இந்த நிகழ்வில் பிராண்ட் ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்கு நாம் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ எதிர்பார்க்கப்படும் வடிவமைப்பு குறித்து பார்க்கலாம். வடிவமைப்பை பொறுத்தவரை நெக்ஸ்ட் ஜென் ஒன்பிளஸ் 10 ப்ரோ அதன் முன்னோடியான ஒன்பிளஸ் 9 ப்ரோ அதன் முன்னோடியான ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனம் போன்று இருக்கும் எனவும் இது வேறுபட்ட கேமரா தொகுதியை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா

டிரிபிள் ரியர் கேமரா

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் டிரிபிள் சென்சார்களை வைப்பதற்கு இது ஒரு சதுர வடிவ கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஹேசல்ப்ளாட் பிராண்டிங் சென்சார்களுக்கு அடுத்ததாக செங்குத்தாக வைக்கப்படும் எனவும் பிராண்டின் லோகோ பின்புற பேனலின் மையத்தில் இது இருக்கும் என கூறப்படுகிறது.

வலது விளிம்பில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர்ஸ் இடது புறத்தில் இருக்கும் எனவும் முன்பக்கத்தில் சாதனம் திரையின் மேல் இடது மூலையில் வைக்கப்படும் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ அம்சங்களை பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனமானது 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வரும் எனவும் 2கே தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஒஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 ஒஸ் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட் வசதியோடு வரும் எனவும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனமானது ஆண்ட்ராய்டு 12 ஒஸ், கலர் ஓஎஸ் 12 தனிப்பயன் ஸ்கின் உடன் வருகிறது.

அதேபோல் இமேஜிங் ஆதரவுக்கு என டிரிபிள் கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் ஆதரவு மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகிய டிரிபிள் ரியர் கேமராக்கள் உடன் வருகிறது. செல்பி வசதிகளுக்கு என 32 மெகாபிக்சல் முன்புற கேமராவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் 80 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் அம்சங்கள், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு இந்த சாதனம் வரும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oneplus 10 Pro Might be Launch Cheaper than Oneplus 9 Pro: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X