தரமான உயர்தர அம்சங்கள்: ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்- விற்பனை தேதி இதுதான்!
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் 2கே ஃப்ளூயிட் அமோலெட் எல்டிபிஓ 2.0 டிஸ்ப்ளே ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1300 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது எச்டிஆர் 10 ப்ளஸ் ஆதரவோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இது 480 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தைக் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் முன்னதாகவே சீனாவில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஆக்ஸிஜன் ஓஎஸ் ஆதரோவடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் வாரிசாக இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

புதிய முப்பரிமான குளிரூட்டும் முறை
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் சக்தி வாய்ந்த சிப் பயன்படுத்தப்படுகிறது. அடுத்ததாக ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி சாதனத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பது இதில் புதிய முப்பரிமான குளிரூட்டும் முறை பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது அதிக வெப்பமடைவதைத் தவிர்க்க உதவுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
க்யூ எச்டி ப்ளஸ் ஃப்ளூயட் அமோலெட் டிஸ்ப்ளே
ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஆனது 6.7 இன்ச் க்யூ எச்டி ப்ளஸ் ஃப்ளூயட் அமோலெட் எல்டிபிஓ 2.0 டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ 1300 நிட்ஸ் அதிக பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது எச்டிஆர் 10 ப்ளஸ் டச் மாதிரி விகிதம் மற்றும் 480 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீத்ததைக் கொண்டிருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 வரை உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12 ஆதரவோடு வருகிறது.

50 எம்பி பிரதான கேமரா, 32 எம்பி செல்பி கேமரா
ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி சாம்சங் ஐசோசெல் சேஎன்1 அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், ஓஐஎஸ் உடனான 8 எம்பி டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 789 கேமரா என பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்போடு வருகிறது. ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் வாரிசாக இது இருக்கலாம் என கருதப்பட்டாலும் ஒன்பிளஸ் 10 ப்ரோ அதிக கேமரா செயல்திறனைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி வசதிக்கு என 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
கூடுதலாக ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஆதரவைக் கொண்டிருக்கிறது. டால்பி அட்மாஸ், ஹை ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டிருக்கிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவைக் கொணடிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5 முதல் விற்பனை
இந்தியாவில் ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம்.ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆகும். இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரிண்ட் விலை ரூ.66,999 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.71,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எமரால்டு ஃபாரஸ்ட் மற்றும் வோல்கானிக் ப்ளாக் ஆகும். ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் இந்தியா மற்றும் அமேசான் இணையதளம் மூலமாக ஏப்ரல் 5 2022 முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications